இன்று நாமும் அப்படியொரு ஆப்டிக்கல் இல்யூஷனைப் பற்றி தான் பார்க்க போகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் மறைந்திருக்கும் பூனையின் உருவத்தை 17 விநாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான சவால். இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர்.
கீழே உள்ள படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள். அதில் பெரிய மக்கள் கூட்டம் காண்பிக்கப்பட்டுள்ளது. அதில் உங்களைப் போன்றும், என்னைப் போன்றும் பலரது மனித முகங்கள் உள்ளன. மேலோட்டமாக பார்க்கும் போது மனித முகங்கள் மட்டுமே உங்களுக்கு தெரியும், ஆனால் இதில் ஒரு பூனையின் உருவம் மறைந்திருக்கிறது. உங்களுக்கான 17 நிமிடங்கள் தொடங்கிவிட்டது.
மனித முகங்களுக்கு நடுவே உள்ள பூனையை கண்டுபிடித்துவிட்டீர்களா?. அப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்களால் கண்டுபிடிக்க முடியாது என நினைத்தால், அதற்காக நாங்கள் சில குறிப்புகளை கீழே பகிர்ந்துள்ளோம்.
– படத்தின் நடுவில் இருந்து பார்க்கத் தொடங்குங்கள்.
– பொதுவாக இதுபோன்ற படங்களில், ஓவியர் படத்தின் நடுப்பகுதியில் எங்காவது உருவத்தை மறைத்து வைக்க வாய்ப்புள்ளது.
– கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் பூனையை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால், படத்தின் நடுப்பகுதி அல்லது மூலைகளை நோக்கி ஆழமான பார்வையை ஓட விடவும்.
மேலே உள்ள விதிகளைப் பின்பற்றினால், படத்தில் மறைந்திருக்கும் பூனையைக் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது.
Also Read : என்னையும் சாதாரண மனிதன் போல் மதியுங்கள் – வித்தியாச முயற்சியால் வேதனைப்படும் இளைஞர்
இப்போது கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை, ஆப்டிக்கல் இல்யூஷன் படத்துடன் ஒப்பிட்டு பாருங்கள். உங்களுக்கான நேரம் முடிந்துவிட்டது. பூனையை கண்டுபிடித்துவிட்டீர்களா?. 17 விநாடிகளுக்குள் மறைந்திருக்கும் உருவத்தை கண்டுபிடிப்பது என்பது மிகவும் சவாலானது, அத்துடன் போட்டியாளர்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் மனித உருவங்களுக்கு இடையே மறைக்கப்பட்டுள்ளது.
Also Read : பனி மூடிய காட்டின் நடுவே ஓநாய்.. எங்கு என்று 18 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
இதுவரையில் நீங்கள் பூனையின் உருவத்தை கண்டுபிடிக்கவில்லை என்றால், வலது மூலைக்கு அருகே கீழே இருந்து மூன்றாவது வரிசையை உற்றுப்பாருங்கள். அங்கு இரண்டு நபர்களின் முதுகுக்கு பின்னால் இருந்து எட்டிப்பார்க்கும் பூனையை காணமுடியும். இன்னும் குழப்பமாக இருந்தால் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள படத்தை பார்த்து பூனையை அறிந்து கொள்ளுங்கள்.
சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் குறித்து பல பயனர்களும் “என்னால் இங்கு எந்த பூனையையும் காண முடியவில்லை” என்றும், “நான் அதைக் கண்டுபிடித்தேன், அது எவ்வளவு நன்றாக மறைக்கிறது என்று பாருங்கள்” என்றும் கலவையான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.