ஆனால் சிலரோ பல நேரம் கண்டுபிடிக்க முயன்றாலும் தோல்வியைத் தான் சந்திப்பார்கள். இப்படி நமக்கு வாட்ஸ் அப் அல்லது சோசியல் மீடியாவில் வரக்கூடிய புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்பி புதிர் போடும் பழக்கம் நம்மிடம் அதிகரித்து வருகிறது.
தற்போது 9 வினாடிகளில் பாறைக்குள் ஒளிந்திருக்கும் மானைக் கண்டுபிடியுங்கள் என்ற ஒளியியல் மாயை புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. இதை 3 சதவீத மக்கள் மட்டுமே மானைக் கண்டுபிடிக்க முடியும் என்பது தெளிவானது. இந்நிலையில் தான் மூளைக்கும், கண்களுக்கும் சவால் விடக்கூடிய மானை நீங்கள் கண்டுபிடியுங்கள் என்று உங்களுக்கு சவால் விடுகிறோம்.. இப்ப நீங்க கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்று இணையத்தில் ஒளியியல் மாயை புகைப்படம் வைரலாகிறது.
ஒருவேளை உங்களால் மலைச்சரிவில் பாறைக்குள் உள்ள கண்டுபிடிக்க உங்களுக்கு சில டிப்ஸ்களை உங்களுக்கு இங்கே முன்வைக்கிறோம்.
டிப்ஸ் 1: மான் பாறைகளில் நிற்கிறது.
டிப்ஸ் 2: ஒளியியல் மாயைப் புகைப்படத்தில் அதன் நிழலைப் பிரதிபலிக்கிறது.
இந்த ஆப்டிகல் இல்யூசன் படத்தில் மறைந்திருக்கும் மானைக் கண்டுபிடிக்க இந்த டிப்ஸ் உங்களுக்குக் கண்டுபிடிக்க உதவுகிறதா.?
Also Read : சித்த பிரமை பிடித்தது போல் அலறி துடித்து கதறி அழுத பள்ளி மாணவிகள்.. அதிர்ச்சி அளிக்கும் வீடியோ
பாறைக்குள் இருக்கும் மானை முதலில் பார்க்கும் போது நிச்சயம் நமக்கு தெரியாது. ஆனால் நமது மூளைக்கும், கண்களுக்கும் ஒருசேர வேலைக்கொடுத்து உன்னிப்பாக உற்றுப்பார்க்கும் போது நிச்சயம் 9 வினாடிகள் என்ன? 3 வினாடிகளிலே கண்டுபிடித்துவிடலாம்..
புகைப்படங்களை சட்டென்று பார்க்கும் போது பாறைகள் மட்டும் தான் நமது கண்களுக்குத் தெரியும். ஆனால் உன்னிப்பாகக் கவனிக்கும் போதும், முதலில் நிழலைக்காண முடிகிறது. பின்னர் நிழல் வரும் திசையில் மான் இருப்பதை ஈஸியாக நம்மால் பார்க்க முடிகிறது.
Also Read : பாகுபலி ராஜமாதா போல் தனது குழந்தையை மக்களுக்கு காட்டிய கொரில்லா – வைரல் வீடியோ
ஆனால் இந்த சவாலை ஏற்றவர்கள் யாரும் குறிப்பிட்ட நேரத்தில் கண்டுபிடிக்கவில்லை. 3 சதவீத மக்கள் மட்டுமே குறிப்பிட்ட 9 வினாடிகளுக்குள் கண்டுபிடித்தனர். இந்த ஒளியியல் மாயை புகைப்படங்கள் நிச்சயம் பலரின் புத்திசாலித்தனத்தை அதிகப்படுத்துவதோடு, நம்மை கொஞ்சம் ரிலாஸ்ஸாக வைத்திருக்கவும் உதவுகிறது.
இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தை இணையத்தில் பார்த்த நெட்டிசன்கள் பலர், என்னால் உடனே மானை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், கொடுத்த வினாடிகளுக்குள் கண்டுபிடிப்பது என்பது சவாலான விஷயம் என தெரிவித்தனர். இதோடு சில நேரங்களில் நம்முடைய புத்திசாலித்தனத்தை நாமே சோதிக்க முடிகிறது என்றும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
Also Read : மரக்குவியலில் பதுங்கியிருக்கும் பூனை தெரிகிறதா.? 20 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லாடி.!
இதுப்போன்று சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்களை யாருடைய உதவி இல்லாமல் கண்டுபிடிக்க நீங்கள் முயற்சித்தால் நீங்கள் தான் அதிபுத்திசாலியாக தான் இருப்பீர்கள். எனவே நீங்களும் இனி உங்களுக்கு கிடைக்க கூடிய ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படங்களைக் கண்டுபிடிப்பதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து மகிழுங்கள்..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.