Tamil Entrepreneurs

Optical Illusion Can You Spot the Hidden Peacock in This Picture in 15 Seconds | மான்கள் கூட்டத்தில் மறைந்திருக்கும் ஒரே ஒரு மயில்


சோஷியல் மீடியாக்களில் இப்போதெல்லாம் தவறாமல் பிரபலமாகும் ஒன்றாக இருக்கின்றன ஆப்டிகல் இல்யூஷன்கள். ஏனெனில் இந்த இல்யூஷன்களில் மறைந்திருக்கும் புதிர்கள் அல்லது விஷயங்கள் மிகவும் சுவாரசியமாக இருப்பதால், அதை கண்டுபிடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்

மக்கள் மத்தியில் வைரலாகும் பல இல்யூஷன் இமேஜ்கள் கண்கள் மற்றும் மூளையை ஏமாற்றி குழப்பமடைய செய்கின்றன. தங்களால் கண்டுபிடிக்க முடியாத ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை நெட்டிசன்கள் தங்கள் நண்பர்கள் மாற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடையை கண்டுபிடிக்க சொல்லி சவால் விடுகின்றனர். இது இப்படியே பலருக்கும் ஷேர் செய்யப்படுகிறது. எனினும் பெரும்பாலான ஆப்டிகல் இல்யூஷன்களில் சரியான விடையை 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே கண்டறிவதாக கூறப்படுகிறது.

இது போன்ற சற்று கடினமான ஆப்டிகல் இல்யூஷன் ஒன்றை தான் நாம் இங்கே பார்க்க போகிறோம். கீழே நீங்கள் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷனை பார்த்த பலரும் வெகு நேரம் குழம்பி போயுள்ளார்கள். செயற்கையாக உருவாக்கிய ஆப்டிகல் இல்யூஷன்களை விட இயற்கை காட்சிகளில் தானாகவே கிடைக்கும் ஆப்டிகல் இல்யூஷன்கள் சற்றே கடினமானவை. இதை நிரூபிக்கும் வகையிலான இல்யூஷன் இமேஜ் தான் தற்போது வைரலாகி வருகிறது. கீழே நீங்கள் பார்க்கும் படத்தில் ஒரு நிலப்பரப்பு உள்ளது. புல் படர்ந்த திட்டுகளால் மூடப்பட்டிருக்கும் இந்த நில பகுதியில் மான்களின் கூட்டம் புல்லை மேய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த மான்களின் கூட்டத்திற்குள் மயில் ஒன்று மறைந்திருக்கிறது. அந்த மயிலை தான் நீங்கள் வெறும் 15 வினாடிகளில் கண்டறிய வேண்டும். படம் கீழே..

மேலே உள்ள இயற்கை காட்சிகளுக்கு மத்தியில் எங்கோ ஒரு மயில் மறைந்துள்ளது. அதை உங்களால் 15 வினாடிகளில் கண்டறிய முடிகிறதா என்பதை விட, முதலில் கண்டறிய முடிகிறதா என்று பாருங்கள். ஏனென்றால் மேலே படத்தில் இருக்கும் இயற்கை காட்சியில் வண்ணம் இல்லாததால், வண்ணமயமான பறவையான மயிலை கண்டறிவது ஈஸி என்று நீங்கள் நினைக்கலாம்.

Also Read : கொலை செய்தது யாரென்று கண்டுபிடியுங்கள் – நீங்கள் எவ்வளவு புத்திசாலி என்று பார்க்கலாம்.!

ஆனால் இந்த இமேஜின் மீது உங்கள் பார்வையை செலுத்தியவுடன் உங்கள் எண்ணம் தவறு என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். ஏனென்றால் அவ்வளவு எளிதில் அந்த மயிலை கண்டறிய முடியாது என்பதே உண்மை. க்ளூ வேண்டுமென்றால் சொல்கிறோம். மேலே உள்ள இமேஜ் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேல் பகுதி மரங்கள் உள்ள பகுதி. நடு பகுதி கணிசமான எண்ணிக்கையிலான உலர்ந்த புதர்களை கொண்டது. மூன்றாவது பகுதியில் ஒரு பள்ளம் இருக்கிறது. இப்போது நீங்கள் இந்த இமேஜின் நடுப் பகுதியின் கீழ்-வலது மூலையில் கவனம் செலுத்துங்கள். அங்கிருக்கும் ஒரு மானின் பின்னால் மயில் மறைந்திருப்பதை காணலாம். இன்னமும் விடை தெரியவில்லை என்றால் கீழே இமேஜில் வட்டமிடப்பட்டிருக்கும் பகுதியில் விடை இருக்கிறது பாருங்கள்.

உங்களால் கடைசி வரை மயிலை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். ஏனென்றால் முதலில் எளிதாக கண்டுபிடித்து விடலாம் என்று களமிறங்கிய பலரால் மறைந்திருக்கும் மயிலை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே உண்மை.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link

Leave a Reply

Your email address will not be published.