Tamil Entrepreneurs

Optical illusion Can you spot the snow leopard hidden in this photo in 13 seconds


பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன்கள் நம் கண்கள் மற்றும் மூளைக்கு வேலை கொடுப்பதாக வருகின்றன. இவற்றில் ஒரு சில எளிதில் தீர்க்க கூடிய புதிரை கொண்டு வந்தாலும், பல ஆப்டிகல் இல்யூஷன்கள் குழப்பத்தில் நம்மை ஆழ்த்த கூடிய வகையில் இருக்கும். தற்போது நாம் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷன் ஒரு அழகான இயற்கை காட்சி அடங்கியது.

இந்த வைரல் இமேஜ் பனிப் போர்வையால் மூடப்பட்ட பாறை மலைகளின் ரம்மியமான அழகை நம் கண்களுக்கு விருந்தாக படைக்கிறது. ஹிமாச்சல பிரதேசத்தின் ஸ்பிதி பள்ளத்தாக்கில் (Spiti Valley), பிரபல இந்திய வனவிலங்கு புகைப்படக் கலைஞரான ஹிரா பஞ்சாபியின் கேமராவால் கிளிக் செய்யப்பட்டது. இந்த ஃபோட்டோவை கிளிக் செய்துள்ள ஹிரா பஞ்சாபி கூறுகையில், இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவங்களில் ஒன்றாகும் என குறிப்பிட்டுள்ளார். உங்களின் பார்வை திறனுக்கு சவால் விடும் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜை கீழே பாருங்கள்.

பனி படர்ந்த கம்பீரமான மலையின் காட்சியை நீங்கள் காணலாம். மேற்காணும் பனி மூடிய மலைகளில் வேட்டையாடும் விலங்கான பனி சிறுத்தை ஒன்று இருக்கிறது. பனி சிறுத்தை உணவை தேடி செல்லும் போது தனக்கு தேவையான இரையை துல்லியமாக வேட்டையாட பதுங்கி பதுங்கி உருவத்தை மறைத்து கொண்டு செல்வதில் சிறந்தது. இந்த இமேஜில் மறைந்திருக்கும் பனி சிறுத்தையை வெறும் 13 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே சவால்.

Also Read : கொலை செய்தது யாரென்று கண்டுபிடியுங்கள் – நீங்கள் எவ்வளவு புத்திசாலி என்று பார்க்கலாம்.!

மறைந்திருக்கும் சிறுத்தையை நீங்கள் கண்டு கொண்டீர்களா.!!

இல்லை என்றால் மீண்டும் படத்தை உற்றுப் பாருங்கள். மலைகளின் கார்னர்களை கவனிக்க முயற்சி செய்யுங்கள். இப்போது அந்த மிருகத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம். இந்த க்ளூவிற்கு பிறகும் படத்தில் சிறுத்தை எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு, மற்றொரு க்ளூ தருகிறோம். இந்த இமேஜின் வேறு எந்த பகுதியையும் கவனிக்காமல் நேராக வலது பக்கம் கீழே கவனியுங்கள். சாம்பல் நிறத்தில் ரோமங்கள் நிறைந்த பெரிய சிறுத்தையானது பாறைகள் நிறைந்த மலையில் ஏறி கொண்டிருப்பதை காணலாம்.

Also Read : 9 வினாடிகளில் ஆந்தை கூட்டத்திற்கு மத்தியில் இருக்கும் பூனையை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்!

உங்களால் இன்னும் சிறுத்தையை பார்க்க முடியவில்லை என்றால் கீழே சிறுத்தை இருக்குமிடம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள இமேஜை பாருங்கள்.

ஏற்கனவே கூறியது போல பனி சிறுத்தை தனது இரையின் கண்களில் சிக்காமல் லாவகமாக அதை வேட்டையாட சுற்றுச்சூழலுடன் கலப்பதில் தேர்ந்தது. நீங்கள் ஒரு நல்ல பார்வை திறன் மற்றும் கவனிக்கும் திறன் கொண்டவராக இருப்பின் விடையை விரைவாக கண்டுபிடித்திருக்கலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link

Leave a Reply

Your email address will not be published.