Tamil Entrepreneurs

Optical illusion Only a Genius Can spot The Hidden Puppy in this image in 15 Seconds. Can You?


சோசியல் மீடியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் மீதான ஆர்வம், தற்போது நெட்டிசன்களுக்கு தீராத வேட்கையாக மாறி வருகிறது. மூளையை கசிக்கிப் பிழிந்து, கண்களை நன்றாக உற்றுநோக்கி கண்டுபிடிக்க வேண்டிய புதிர்களைக் கொண்ட ஆப்டிகல் இல்யூஷன்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்திழுந்து வருகின்றன.

பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் ஆப்டிகல் இல்யூஷனில் மறைந்திருக்கும் விஷயத்தை கண்டுபிடிப்பது என்பது பூங்காவில் ஜாலியாக ஒரு வாக்கிங் செல்வது போன்றது தான் என்றாலும், கொஞ்சம் அதற்காக மெனக்கெட்டு நேரத்தையும், மூளையையும் நீங்கள் செலவழிக்க வேண்டி வரும். அப்படி உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி மறைக்கப்பட்டுள்ள வடிவம் அல்லது புகைப்படத்தை கண்டுபிடித்துவிட்டால், அதன் மூலம் கிடைக்கும் உற்சாகமும், புத்துணர்ச்சியும் அளவிட முடியதாது. அதனால் தான் பலருக்கும் இந்த புதிர் விளையாட்டு பலரையும் தன்வசப்படுத்தி வருகிறது.

இன்று அப்படிப்பட்ட சுவாரஸ்யமான ஆப்டிக்கல் இல்யூஷனைப் பற்றித் தான் பார்க்க போகிறோம்…

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பல வகையான தாவரங்கள் மற்றும் பூக்கள் நிறைந்த ஒரு நெரிசலான தோட்டத்தை நீங்கள் காணலாம், பல்வேறு வகையான பறவைகள் மகிழ்ச்சியுடன் பாடி திரிவதையும் காணலாம். பார்க்க , பார்க்க அழகாக இருக்கும் இந்த காட்சிக்குள் ஒரு நாய் குட்டி மறைந்துள்ளது.

பல வண்ண பூக்களுக்கு நடுவே பறவைகள் அங்கும், இங்கும் அமர்ந்து ஆனந்தமாய் பாடிக்கொண்டிருக்கும் இந்த தோட்டத்திற்குள் மறைந்திருக்கும் நாய் குட்டியை 15 விநாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். பறவைகளுடனும், பூக்களுடன் கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருக்கும் குட்டி நாயைக் கண்டுபிடிக்க முடிகிறதா? என முயற்சித்துப் பாருங்கள்…

Also Read : இந்த யானை கூட்டத்தில் மறைந்திருக்கும் ஒரே ஒரு காண்டாமிருகத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா.?

இது ஒரு தந்திரமான ஆப்டிகல் இல்யூஷன் போட்டோ, ஏனெனில் தோட்டத்தின் சூழ்நிலை மற்றும் துடிப்பான வண்ணங்கள் நாய்க்குட்டியைக் கண்டுபிடிப்பதை சவாலாக்குகின்றன. அதுவும் வெறும் 15 விநாடிகளுக்குள் தேடிப் பார்க்க வேண்டும் என்பது கூடுதல் சவாலாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

நீங்கள் நாய்க்குட்டியைக் கண்டுபிடித்தீர்களா?… இல்லை என்றால் இதோ உங்களுக்கான டிப்ஸ் ஒன்றைத் தருகிறோம்… படத்தின் இடது பக்கத்தில் நாய்க்குட்டி மறைந்திருக்கவில்லை.

Also Read : 3500 ஆடுகளுக்கு வேலை கொடுத்த கூகுள்..! -அட நம்புங்க பாஸ்

இப்போது, ​​உங்களில் எத்தனை பேர் நாய்க்குட்டியைக் கண்டீர்கள்?… நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது… அச்சச்சோ 15 விநாடிகள் முடிந்துவிட்டன. இதில் பெரும்பாலானோர் நாய்க்குட்டியைக் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். நாய்க்குட்டியைக் கண்டுபிடிக்காதவர்கள் வலது பக்கம் வெள்ளை நிற பறவை அமர்ந்திருக்கும் தொட்டிக்கு பின்புறம் உற்றுப்பாருங்கள். அதில் இருந்து இரண்டாவது தொட்டிக்குப் பின்புறம் நாய்க்குட்டி மறைந்திருப்பதை நீங்கள் காணலாம்.

இவ்வளவு கஷ்டமான இந்த ஆப்டிக்கல் இல்யூஷனுக்கான விடையைக் கண்டுபிடித்தவர்கள் நீங்களே தோள்களைத் தட்டி சபாஷ் சொல்லிக்கொள்ளுங்கள். ஏனெனில் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் ஒரு சதவீதம் பேர் மட்டுமே கண்டுபிடித்துள்ள இந்த ஆப்டிக்கல் இல்யூஷனைக் கண்டுபிடித்ததால், நீங்கள் இப்போது அதிபுத்திசாலிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளீர்கள்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link

Leave a Reply

Your email address will not be published.