அந்த வகையில் நம் கண்களை ஏமாற்றும் ஒருவகை வித்தியாசமான ஆப்டிகல் இல்யூஷன் GIF ஒன்றை தான் இப்போது பார்க்க இருக்கிறோம். சோஷியல் மீடியாவில் ஷேர் செய்யப்பட்டுள்ள இந்த ஆப்டிகல் பேண்டஸ்ம் (optical phantasm) நம் கண்களை ஏமாற்றும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த GIF ஆன்டி-கிளாக் திசையில் சுற்றும் 2 ரிங்க்ஸ்களை கொண்டுள்ளது. இதில் எந்த பக்கம் உள்ள ரிங்க் வேகமாக சுழல்கிறது என்று பார்த்து சொல்லுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் GIF அடங்கிய ட்விட்டை பாருங்கள்.
அகியோஷி கிடோகா என்ற ஜப்பானிய சோதனை உளவியல் நிபுணர் தான் இந்த ஆப்டிகல் இல்யூஷனை உருவாக்கி ஷேர் செய்து இருக்கிறார். இதை பார்த்ததும் நீங்கள் இடது பக்கம் இருக்கும் ரிங்கை விட வலது பக்கம் உள்ள ரிங்க் தான் வேகமாக சுற்றுகிறது என்று சொல்லி விட்டு இதில் என்ன புதிர் இருக்கிறது என்று நினைக்கலாம்.
The right ring appears to rotate faster than the left one, though the velocity is the same. pic.twitter.com/YnJ9Uh6Hvq
— Akiyoshi Kitaoka (@AkiyoshiKitaoka) October 8, 2022
ஆனால் அகியோஷி கிடோகா ட்விட்டரில் கூறியுள்ள கூற்றின்படி, “வலது பக்கம் உள்ள ரிங் இடதுபுறத்தை விட வேகமாக சுழல்வதாக தோன்றினாலும் இரண்டின் திசைவேகமும் (velocity) ஒன்று தான்” என்று குறிப்பிட்டு உள்ளார். அதாவது இரண்டு ரிங்குமே ஒரே வேகத்தில் தான் ஆன்டி-கிளாக் திசையில் சுற்றுகிறது என்று கூறி உள்ளார். இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் யோசிக்கலாம்.!!
Also Read : உடலை வில்லாய் வளைத்து உலக சாதனை படைத்த சிறுமி.. வைரல் வீடியோ
மேலே உள்ள இல்யூஷன் phi phenomenon-களுடன் தொடர்புடையது. உதாரணமாக ஒளி விளக்குகள் அருகருகே வைக்கப்பட்டு, ஒன்றன் பின் ஒன்றாக வேகமாக ஒளிரும் போது எழும் இயக்கத்தின் மாயையாகும். மேலே நீங்கள் பார்த்த இல்யூஷனை பொறுத்த வரை contrast-ன் போது ஏற்படும் மாறுபாடுகள் வலது பக்கம் இருக்கும் ரிங் வேகமாக சுற்றுவது போல நம்மை உணர வைக்கிறது. அதாவது இடது பக்கத்தில் சுற்றும் ரிங் ஒரே நிறத்தில் (கருப்பு) இருக்கும் அதே நேரத்தில், வலது பக்கத்தில் இருக்கும் ரிங் 2 கலர்களில் ( கருப்பு & வெள்ளை ) மாறி கொண்டே சுற்றுகிறது.
Also Read : இந்த படத்தில் காலியாக இருக்கும் 5 பாட்டில்களை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
இதுவே இரண்டு ரிங்க்குகளும் ஒரே வேகத்தில் சுற்றினாலும் வலது பக்கம் இருக்க கூடிய ரிங் வேகமாக சுற்றுவது போல நம் கண்களை உணர வைத்து ஏமாற்றுகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் அடங்கிய ட்விட் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.