Tamil Entrepreneurs

Pet grooming… செல்ல பெட்டுக்கு ஒரு பியுட்டி பார்லர்… அட, இப்படியொரு புது தொழிலா?


நாயைக் குளுப்பாட்டி நடுக்கூடத்தில் வைத்தால்… கை நிறைய காசு!! பெட் குரூமிங் ஸ்பாக்களில், பணக்காரர்களின் செல்லப்பிராணியை வாசனை சோப்பு ஷாம்பு தேய்த்துக் குளிப்பாட்டி, ஸ்டைலாக முடி திருத்தி, பூச்சிபேன் அகற்றி, கழுத்தில் ஒரு அசத்தலான ரிப்பனைக் கட்டி… இந்த ஜிம்மியோ, நிம்மியோ, டம்மியோ அவரவர் அம்மா – அப்பா வரும்போது வரிசை கட்டி நிற்க வைத்தால்… அசந்துபோவார்கள். ‘‘யே, சிம்மி, என் கண்ணே பட்ரும்போல இருக்கேடா…’’ என்று குதூகலிப்பார்கள்.

பெட் குரூமிங் | Pet grooming

இந்தப் புது யுக சர்வீஸை யார் வேண்டுமானால் எடுத்து செய்து, அதில் நல்ல பேர் வாங்கிவிடலாம். கிடுகிடுவென பிசினஸை வளர்த்து பட்டையைக் கிளப்பிவிடலாம் என்று மனக்குதிரையைத் தட்டிவிட நினைக்கிறீர்களா…? அவசரப்படாதீங்க ப்ரோ.

செல்லப் பிராணிகள் மீது அபாரமான ஈடுபாடு, ஆசை, டன் கணக்கில் பொறுமை, கடினமான உழைப்பு, இத்யாதி இத்யாதி மிகவும் தேவை. இப்படி ஒரு ஈடுபாடு இருந்தால், ஏதோ ஒரு கார் ஷெட்டை வாடகைக்கு எடுத்து, அதில் இரண்டு தொட்டிகளை வைத்து ‘‘நான் ரெடி. எங்கே செல்ல நாய்…?’’ என்று கூவினால்… யதார்த்தத்தில் தடால் என்று விழுந்துவிடுவீர்கள்.

பெட் குரூமிங் | Pet grooming

பெட் குரூமிங் செய்யும் நுட்பங்களை ஒன்று கற்று தேர்ச்சி பெற்று சர்ட்டிபிகேஷன் வாங்கினால்தான், ஆயிரங்களைக் கொடுத்து வாங்கிய டைகரையோ, ஜூலியையோ பெட் பேரண்டுகள் உங்களை நம்பி வருவார்கள். இந்த மாதிரி பயிற்சி, சர்ட்டிபிகேட்டை சிலர் அமெரிக்கா சென்று கற்று வருகிறார்கள். இவர்கள்தான் இந்தத் தொழிலின் எல்லா நுணுக்கங்களையும் நன்றாகக் கற்று, தேர்ச்சி பெற்று, நாயைக் குளிப்பாட்டி, பெரும் பணம் சம்பாதிக்கிறார்கள்.

ஆரம்ப முதலீடு குறைந்தபட்சம் ரூ.15 லட்சம் தேவை. ஆறு மாத காலத்துக்கு கரண்ட் சார்ஜ், தண்ணீர், பெட் குரூமிங் தொடர்பான கருவிகள், இதர செலவுகளுக்கு மாதம் ரூ.25,000 என அவசியம் இருக்க வேண்டும்.

பெட் குரூமிங் | Pet grooming

அது மட்டுமா, ஒரு சூப்பர் லொகேஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எங்கே? செல்லப் பிராணிகள் அதிகம் வைத்துக்கொள்ளும் அப்பர் மிடில் கிளாஸ், சூப்பர் ரிச் கஸ்டமர்கள் வாழும் இடத்திற்கு அருகில் பெட் ஸ்பாவை வைத்தால் வரும்படி நிச்சயம்.

பூனே, புது டெல்லி, பெங்களூர் மாநகரங்கள்தான் தற்போது டாப் குரூமிங் இடங்களாக விளங்குகின்றன. இந்த புது பிசினஸில் வருமானத்தை லட்சத்தில் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள் சிலர். சராசரியாக ஒரு பிராணியை குரூமிங் செய்தால், ரூ.1000 முதல் ரூ.4,000 வரை அசால்ட்டாக கிடைத்துவிடுகிறது. இதில் ஆப் போன்ற அதிநவீன சமாச்சாரங்களை எல்லாம் கொண்டு பெங்களூரில் அதகளப்படுத்துகிறார்கள் சிலர்.

கூகுளில் ஜூஹி பவார் என்பவர் பெட் குரூமிங்கில் எக்ஸ்பர்ட். இந்தத் தொழிலில் இருக்கும் நெளிவுசுளிவுகளை அழகாக, தெளிவாக எடுத்துச் சொல்லி எழுதியிருக்கிறார்.

பெட் குரூமிங் | Pet grooming

அவர் மாதிரி நீங்களும் வரவேண்டும் எனில், பெட்களைப் பராமரிப்பது, பிசினஸ் நடத்தும் விதம், பெட் அப்பா, அம்மாக்களை நீங்கள் அணுகும் விதம், துப்புரவான இடம், நேர்மை தவறாத ஈடுபாடு, பிராணிகள் உங்கள் கவனிப்பில் எவ்வளவு சுகமாக உள்ளன, நல்ல பப்ளிக் ரிலேஷன், சோசியல் மீடியா புரஃபைல்… இவை அனைத்திலும் நீங்கள் தேர்ச்சி பெற்று, ‘டாப் கன்’-ஆக இருந்தால் மட்டுமே நேரடியாகவோ, ரெஃபரல்கள் மூலமாகவோ பலரும் உங்களைத் தேடி வருவார்கள்.

இந்தத் தொழில் ஐந்து ஆண்டுகள் சராசரியாக 20% வரை வளர்ந்துவிட்டது என்கிறது ஒரு கணிப்பு. செல்லப் பிராணிகளை வளர்க்கும் அப்பா – அம்மாக்களுக்கு வேலை, பிசினஸ் என்று பிசியாக இருப்பதால், அவற்றைப் பராமரிக்க ஒரு குரூமிங் ஸ்பா நிச்சயமாகத் தேவை.

பெட் குரூமிங் | Pet grooming

இவர்களுக்குத் தங்களது செல்லப் பிராணியைக் கொஞ்சி, முத்தமிடத்தான் நேரம் உண்டு. குளிப்பாட்டி, காய வைத்து முடி திருத்தவெல்லாம், நோ டைம், நோ பொறுமை. நல்ல குரூமர்கள் கிடைத்துவிட்டால், மாதம் ஒருமுறை பெட்டைக் கூட்டி வராமல் இவர்களால் இருக்க மாட்டார்கள்.

பெட் குரூமிங் தவிர, பெட் டிரைனிங் (அதாங்க, ஜிம்மி உக்காரு, ஜிம்மி எந்திரி, ஜிம்மி கத்து என்கிற மாதிரி கமாண்ட்ஸை சொல்லிப் பழக்கப்படுத்துவது), நடக்கக் கற்றுத் தருவது, ஸ்பெஷல் டயட் உணவு வகைகள் என்று உபதொழில்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

கணவன், மனைவி சேர்ந்த இந்த பியூட்டி ஸ்பாவை ஆரம்பித்தால் மிகவும் நன்றாக நடத்தலாம். அதாவது, குளிப்பாட்டல், முடிதிருத்தல் வகையறா வேலைகளைக் கணவனும், ஆன்லைனில் அப்பாயிண்மென்ட்டை பிக்ஸ் செய்வது, குரூமிங் ரிப்போர்ட் கார்டைத் தயாரிப்பது, பிசினஸை வளர்த்தெடுப்பது போன்ற வேலைகளை மனைவியும் செய்யலாம்.. உங்கள் மனைவி உங்கள் தொழிலில் ஈடுபட்டு வேலை பார்த்தால், அவருக்குரிய பங்கைத் தந்துவிட வேண்டும். இல்லாவிட்டால், குடும்பம் குருஷேத்ரமாகிவிடும.

பெட் குரூமிங் | Pet grooming

இந்த சேவை வாரத்திற்கு 7 நாளும் 24 மணி நேரமும் தந்தால், பெட் பேரண்டுகள் உங்களை மறக்க மாட்டார்கள்.

இந்தத் தொழிலை நன்றாக செய்ய நினைப்பவர்கள் ஒரு நல்ல பிளானைத் தயார் செய்து வங்கியில் கடன் வாங்கலாம். எல்லாம் பக்காவாக செய்து, இந்த நியூ ஏஜ் பிசினஸைத் தொடங்கிவிட்டீர்கள் எனில், பெட்டுகள் தங்கள் பேரண்டுகளுடன் உங்கள் ஸ்பாவை நோக்கி ஓடிவரும்! நாயைக் குளிப்பாட்டி பவுடர் பூச நீங்க ரெடியா?

– பத்மா ராம்நாத்Source link

Leave a Reply

Your email address will not be published.