Health

Ponni Nadhi Song Glimpse Video Was Released | பொன்னியின் செல்வன் க்ளிம்ப்ஸ் வீடியோ – ரசிகர்கள் கொண்டாட்டம்

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலான அடிப்படையாக வைத்து பிரமாண்டமாக உருவாக்கியிருக்கும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இயக்குநர் மணி ரத்னத்தின் பெரும் முயற்சியால், உருவாக்கப்பட்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி,பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படமானது செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது. படத்திற்கான பின்னணி இசை மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படம் வெளியாக இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், அடுத்தடுத்த அப்டேட்டுகளையும், புரோமோஷன் பணிகளையும் பொன்னியின் செல்வன் குழு தொடங்கியுள்ளது.

Ponni Nadhi

சமீபத்தில்கூட பொன்னியின் செல்வனின் டீசர் வெளியீடு பிரமாண்டமாக நடந்தது. டீசரை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் படம் மாபெரும் வெற்றி பெறும் என கூறிவருகின்றனர். அதேசமயம், படம் மீது சிலர் அதிருப்தியையும் தெரிவித்துவருகின்றனர். இருந்தாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலருக்கும் அதிகரித்துள்ளது.

 

இந்தச் சூழலில், முதல் சிங்கிள் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, அண்மையில் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்தது படக்குழு. இதனையடுத்து படத்தில் இடம்பெற்றிருக்கும் பொன்னி நதி என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகுமென்று படக்குழு அறிவித்தது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்பாடலை கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருக்கிறார்.

மேலும் படிக்க | சமந்தா- நயன்தாரா சர்ச்சை விவகாரம்! விளக்கம் கொடுத்து முடித்துவைத்த கரன் ஜோஹர்! – என்ன சொன்னார் தெரியுமா?

இந்நிலையில் பொன்னி நதி பாடலில் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜூக்கு போட்டியாக வர்றேன் – இமய இயக்குநரின் விருப்பம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published.