Health

Ponniyin Selvan Movie Part 2 Release Date | பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் தெரியுமா

பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ‘பொன்னியின் செல்வன்-1’ பிரம்மாண்டமாக செப்டெம்பர்-30 அன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை சிலிர்க்க செய்துள்ளது.  இப்படத்தை ட்ரோல் செய்ய காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் என்றே சொல்லலாம், கப்பல் சண்டை காட்சிகள், பார்வையாலேயே குறிப்பறிதல் என படம் அனைவரையும் ரசிக்க செய்துள்ளது.  கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க பலரும் முயன்று தோற்றுப்போன நிலையில் இயக்குனர் மணிரத்னம் இதில் சாதனை படைத்துள்ளார்.  லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, அஷ்வின், சோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி என பெரிய நட்சத்திர பட்டாளங்களே இணைந்து இப்படத்தை அலங்கரித்துள்ளனர்.

மேலும் படிக்க | ‘சோழர்களே உங்களுக்கு அவ்வளவுதான்’ – எச்சரிக்கை விடுத்த பாண்டியர்கள்… மதுரையில் கலகலப்பு

இதுவரை நாவலை மட்டுமே படித்து தங்களின் மனக்கண்ணோட்டத்தில் கதாப்பாத்திரங்களை கற்பனை செய்து வந்தவர்களின் கண்களுக்கு இப்படம் சிறப்பான விருந்தை அளித்திருக்கிறது.  இனிமேல் அந்த நாவலில் உள்ள கதாபாத்திரங்களை நினைப்பவர்களின் மனதில் தற்போது ‘பொன்னியின் செல்வன்-1’ படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் முகம் தான் நியாபகத்திற்கு வரும்.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் அமைந்துள்ள பாடல்களும் இப்படத்திற்கு பலம் சேர்த்து ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டுள்ளது.  பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை கண்டு ரசித்தத்திலிருந்து ரசிகர்கள் அனைவரும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை காண வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருந்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் போதே இரண்டாம் பாகத்திற்கான பணிகள் ஓரளவு நிறைவடைந்துவிட்டதாகவும், தற்போது இப்படத்திற்கு போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே படக்குழு இரண்டாம் பாகம் குறித்து தெரிவிக்கையில், முதல் பாகம் வெளியான அடுத்த ஒன்பது மாதங்களில் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று தெரிவித்திருந்தது.  இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்-2’ 2023ம் ஆண்டு கோடை விடுமுறையை கொண்டாட வைக்கும் வகையில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | முதல் நாளே 100 கோடி அருகில் – பொன்னியின் செல்வன் மெகா வசூல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published.