Health

ponniyin selvan nandhini character look of aishwarya rai went viral | ஐஸ்வர்யா ராய் ஒரு தெய்வப்பிறவி வாயை பிளக்கும் இணையவாசிகள் இந்த போட்டோவுக்கா

கோலிவுட் வட்டாரம் மட்டுமின்றி, இந்திய சினிமாவிலேயே தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வம்’. மறைந்த பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். நடிகர்கள் ஐஸ்வர்யா ராய், விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் செப்.30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்களில் வெளியாக உள்ளது. 

இந்த திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த செப்.6ஆம் தேதி சென்னையில் மிக விமர்சையாக நடைபெற்றது. ரஜினி, கமல் உள்ளிட்டோர் முதல் பல்வேறு திரைப்பட கலைஞர்கள் அதில் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து, இணையத்தில் வெளியான டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

தற்போது, பொன்னியின் செல்வன் ப்ரமோஷனுக்காக நடிகர்கள் பார்த்திபன், விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டோர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். தொடர்ந்து, படத்திற்கான எதிர்பார்ப்பு பரவலாக அதிமாகியுள்ளதை தொடர்ந்து, நெட்டிசன்களின் டெய்லி டாப்பிக்காக பொன்னியின் செல்வன்தான் இருந்து வருகிறது. அந்த வகையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் புகைப்படம்தான் தற்போதைய டிரெண்டிங் எனலாம்.  

மேலும் படிக்க |பொன்னியின் செல்வனில் வைரமுத்துவுக்கு கல்தா – ஏ.ஆர்.ரஹ்மான்தான் காரணம்?

பொன்னியின் செல்வனில்,’நந்தினி’ என்ற எதிர்மறை கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, டிரைலர், போஸ்டர்களில் அவரது கெட்-அப்பை பலரும் சிலாகித்து வருகின்றனர். இந்நிலையில், ட்விட்டரில் பொன்னியின் செல்வன் படத்தின் ரசிகர் ஒருவர்ஸ ஐஸ்வர்யா ராயின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, பின்வறுமாறு குறிப்பிட்டுள்ளார்.

“பொன்னியின் செல்வம் திரைக்கு பின்னான புகைப்படங்கள். நவாலில் லதாமண்டபம் அத்தியாத்தில் வரும் இந்த  இந்த காட்சியில் (ஐஸ்வர்யா ராய் புகைப்படம்), நந்தினி அடுத்தடுத்து மூன்று ஆண்களை (வந்தியதேவன், பெரிய பழுவேட்டையர், ரவிதாசன்) தனது சிரிப்பால் சமாளிக்க வேண்டும். அதை ஐஸ்வர்யா ராய் மிக கச்சிதமாக தனது முகபாவனையால் செய்துள்ளார்” என பாராட்டு மழையை பொழிந்துள்ளார்.

மற்றொரு ஐஸ்வர்யா ரசிகர் ஒருவர்,”நெருப்பால் நிறைந்திருக்கும் முழு நிலவும். அதை கண் ஆயிரம் விஷயங்களை பேசுகிறது” என உருகியுள்ளார். மற்றொரு ரசிகர்,”தெய்வம்… ஐஸ்வர்யா ராய்’ என அதே புகைப்படத்திற்கு அடிப்பணிந்து பதிவிட்டுள்ளார். 

‘நந்தினி’ என அந்த கதாபாத்திரத்தின் பெயரிடப்பட்ட ஒரு ட்விட்டர் பயனாளி, நாவலில் வரும் நந்தினியின் ஓவியத்தையும், ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு,”பொருத்தமானவரை தேர்ந்தெடுத்த மணிரத்தினத்திற்கு எனது நன்றிகள்.

வரும் செப்.30ஆம் தேதி நந்தினி தேவி வருகிறாள்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சான் உடனும், மகள் ஆராத்யா உடனும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட புகைப்படமும் நேற்று வைரலானதும் குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன்னர் ஐஸ்வர்யா ராய் , இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், குரு, இராவணன், எந்திரன் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது நினைவுக்கூரத்தக்கது. 

மேலும் படிக்க | பொன்னியின் செல்வனை இவ்வளவு நாள் எடுக்காமல் இருந்தது நல்லதுதான் – மணிரத்னம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments