Health

Ponniyin selvan part 2 will be released 2023 april? | பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் எப்போது?… வெளியானது புதிய தகவல்

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக மாற்றியிருக்கிறார். லைகா தயாரிப்பில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பலரும் நடித்திருக்கும் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். கடந்த 30ஆம் தேதி படம் வெளியான்கி ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஏறத்தாழ 70 ஆண்டுகளாக மக்களின் மத்தியில் புழங்கிய கதை என்பதாலும், பலரும் எதிர்பார்த்திருந்ததாலும் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு சென்று ரசித்துவருகின்றனர். இதனால் படம் வெளியான முதல் மூன்று நாள்களிலேயே 200 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

வசூலில் வரவேற்பு பெற்றதோடு மட்டுமின்றி, நாவலின் கருவை சிதைக்காமல் மணிரத்னம் எதார்த்தமாக படமாக்கியிருப்பதாகவும் பலர் கூறுகின்றனர். ஆனால் நாவல் படிக்காதவர்களுக்கு பொன்னியின் செல்வன் சிறிது ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. மேலும் பொன்னியின் செல்வனை பாகுபலி படத்தோடு ஒப்பிடும் கூத்தும் நடந்துகொண்டிருக்கிறது. 

Ponniyin selvan

பாகுபலியில் இருந்த பிரமாண்டம் இதில் இல்லை, அதில் இருந்த சண்டைக்காட்சிகள் போல் இதில் இல்லை என பலரும் பாகுபலியையும், பொன்னியின் செல்வனையும் ஒரே தராசில் வைத்துவருகின்றனர். ஆனால், பொன்னியின் செல்வன் வரலாற்று புனைவு, பாகுபலி முழுக்க முழுக்க கற்பனை கதை. இதை எப்படி அதனுடன் ஒப்பிடலாம் என எதிர்வாதமும் வைக்கப்படுகிறது.

இதற்கிடையே பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாகியிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மணிரத்னம் ஒரேகட்டமாக இரண்டு பாகங்களையும் எடுத்துமுடித்துவிட்டார். இதனையடுத்து இரண்டாவது பாகத்தில் ரிலீஸ் எப்போது என பலரிடம் கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு ஒரு பேட்டியில் பதிலளித்த மணிரத்னம் அடுத்த வருடம் மே மாதத்தில் படத்தை எதிர்பார்க்கலாம் என கூறியிருந்தார்.

 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் பாகம் 2 ரிலீஸ் குறித்து புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி படமானது 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாவது உறுதி என கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது. அதுமட்டுமின்றி இரண்டாம் பாகத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அடுத்த வாரம் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன்தான் பாகுபலியைவிட பெஸ்ட்… அடுக்கடுக்கான காரணங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published.