Health

S.j. Surya Acts In Jigarthanda Movie Part 2? | கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்க்கும் சூர்யா?

பீட்சா படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், விஜய் சேதுபதி உள்ளிட்டோரை வைத்து ஜிகர்தண்டா படத்தை இயக்கினார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. மேலும் மதுரையை மையமாக வைத்து வந்த தமிழ் சினிமாக்களில் ஜிகர்தண்டா தனித்து தெரிந்தது. அதுமட்டுமின்றி படத்தில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தப் படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜின் கிராஃப் எகிறியது. அவரது மேக்கிங்கிற்கு எனவும் தனியாக அரசிகர்கள் உருவாக ஆரம்பித்தனர்.

மேலும் படிக்க | தடைகளை கடந்தது சிம்புவின் திரைப்படம்! வெந்து தணிந்தது காடு திரைப்படம் நாளை ரிலீஸ்

பலரின் பாராட்டுக்களைப் பெற்ற ஜிகர்தண்டா படத்தின், இரண்டாம் பாகம் வெளியாகுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்தச் சூழலில் படம் வெளியாகி  8 ஆண்டுகள் நிறைவு செய்ததை ரசிகர்கள் மட்டுமின்றி கார்த்திக் சுப்புராஜும் கொண்டாடினார். 

 

மேலும், ஜிகர்தண்டா படம் 8 வருடங்களை நிறைவு செய்தது தொடர்பாக கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதையும் அவர் உறுதி செய்திருக்கிறார்.

Sj Surya

இந்நிலையில் ஜிகர்தண்டா-2 படத்தில் நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது. இதற்கு முன்பு இந்த கூட்டணியில் வெளியான இறைவி திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ராஜ்கமல் நிறுவனம் விரைவில் 100வது படத்தை தயாரிக்க வேண்டும்: கமல்ஹாசனின் ஆசை

மேலும் படிக்க | “நீங்கள் இன்னொரு தாய்”… நயன் அம்மாவுக்கு விக்னேஷ் சிவன் உருக்கமான வாழ்த்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link

Leave a Reply

Your email address will not be published.