Tamil Entrepreneurs

Sachin Tendulkar dons chef’s hat as he perfectly flips egg. Watch | கிரிக்கெட் மட்டுமல்ல, எனக்கு சமையல் கலையும் தெரியும்


கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் என்ற பெயரை கேட்டவுடன் நமக்கு என்ன நினைவுக்கு வரும்? பேட்டும், கையுமாக இருப்பார் என்றுதானே நினைப்போம். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் கூட பொழுதுபோக்காக விளையாடுவது அல்லது பயிற்சி அளிப்பது அல்லது கிரிக்கெட் சார்ந்த நிகழ்வுகளில் அவர் பங்கேற்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும்.

அதே சமயம், சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசித் தள்ளிய சச்சினுக்குள் சாமானிய மனிதருக்கு உண்டான குறுகுறுப்பான ஆசைகளும் இருக்கத்தான் செய்கின்றன. நாமெல்லாம் பெரிய சமையல் நிபுணர் இல்லை என்றாலும் கூட, வாய்ப்பு தருணங்களில் எதையாவது சிம்பிளாக சமைக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம் அல்லவா!

அதுபோல தான், சச்சின் டெண்டல்கரும் குறும்பாக மேற்கொண்ட சமையல் முயற்சி குறித்த வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏதோ கிரிக்கெட் விளையாட செல்வதைப் போல டிரஸ் அணிந்திருக்கும் சச்சின், கால்களில் பேட்களையும் மாட்டியுள்ளார்.

இந்த கெட்டப்பில் அவர் கிரிக்கெட் விளையாடவில்லை. எங்கோ சமைக்கும் இடத்தில் உள்ள சமையல் நிபுணருடன் பேசிக் கொண்டிருக்கிறார். அதே சமயம், தவா ஒன்றில் முட்டை ஆம்லட் வெந்து கொண்டிருக்கிறது. அது சரியான பதத்திற்கு வந்தவுடன் லாவகமாக தூக்கிப் பிடித்து திருப்பி போடுகிறார். ஆக, சச்சின் கைகளால் சூடான, சுவையான ஆம்லெட் தயாராகி விட்டது.

 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. வீடியோவை ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை நட்சித்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பல பிரபலங்களும் லைக் செய்து வருகின்றனர்.

குறிப்பாக, கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், பிரெட் லீ உள்ளிட்டோர் கமெண்ட் செய்துள்ளனர். பிரெட் லீ வெளியிட்டுள்ள கமெண்டில், “நாளை நான் காலை உணவுக்கு வந்து விடுகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். சச்சின் நீங்கள் ஒரு சர்வதேச சமையல் நிபுணர் என்று இன்ஸ்டாகிராம் பயனாளர் ஒருவர் பாராட்டியுள்ளார்.

என்னதான் பெரிய சாதனையாளராக இருந்தாலும், கௌரவம் பார்க்காமல் எளிய மனிதர்களைப் போல சின்ன, சின்ன விஷயங்களில் பங்கெடுப்பது பாராட்டுக்குரிய விஷயம் என்று மற்றொரு பயனாளர் கூறியுள்ளார்.

ஏற்கனவே ஒருமுறை சமையல் செய்து அசத்திய சச்சின் :

சச்சின் இதுபோல குறும்பாக சமையலில் ஈடுபடுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது, தனது தாயாருக்கு அன்பு பரிசு வழங்க நினைத்தார் சச்சின்.

Read More: ரோஹித் சர்மா-தவான் சாதனை உடைப்பு, விராட் கோலி கேப்டன்சி சாதனை சமன்: பாபர் அசாம் அட்டகாசம்

அன்றைய தினம் தாயாருக்கு மற்ற வேலைகளில் இருந்து ஓய்வு கொடுத்துவிட்டு, அவரே நேரடியாக சமையல் அறைக்குள் நுழைந்தார். அடுத்து ஒரு 15 நிமிடங்களுக்குள் சுடச்சுட உணவை தயார் செய்து தன் தாயாருக்கு வழங்கினார்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

Leave a Reply

Your email address will not be published.