Tamil News

Salem College: College Girls force actor to dance with them | ‘எங்ககூட டான்ஸ் ஆடுங்க’: பிரபல நடிகரை கட்டாயப்படுத்திய கல்லூரி மாணவிகள்


சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் கல்லூரி விழா நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும் பாடகரும் பன்முக கலைஞருமான  கனா படத்தின் நடிகர் தர்ஷன் கலந்து கொண்டார். 

அப்போது கல்லூரியில் இருந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் அவர் தங்களுடன் வந்து நடனமாட வேண்டும் என கத்தி கூச்சலிட்டு கரகோசம் எழுப்பினர்.

இதனையடுத்து நடிகர் தர்ஷன் செய்வது தெரியாமல் திகைத்து மாணவிகளுடன் நடனமாட ஒப்புக்கொண்டார். 

தொடர்ந்து கனா நடிகர் தர்ஷன் அவர் மேடையில் இருந்து கீழே வருவதை அறிந்த மாணவிகள் சடசடவென அவரைச் சூழ்ந்தனர். இதனை அடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் மாணவிகள் அனைவரையும் அப்புறப்படுத்திய நிலையில் ஒரு சில மாணவிகள் மட்டும் நடிகர் தர்ஷன் அவர்களுடன் ஒத்தையடி பாதையில என்ற பாடலுக்கு நடனம் ஆடினர். 

மேலும் படிக்க | ஜெய் நடிக்கும் எண்ணித்துணிக படத்துக்கு U/A சர்ட்டிஃபிகேட் 

நடிகரும் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவிகள் நடுவே நடனமாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து அன்பை வெளிப்படுத்தும் விதமாக கல்லூரி மாணவிகளை நோக்கி இதய வடிவில் கையை அசைத்து நடனம் ஆடினார். 

இந்த நிலையில் கல்லூரி மாணவிகளுக்கு ஒரு படி மேல்  நடிகருடன் வந்திருந்த பிரபல தொலைக்காட்சி நடிகர்கள் மற்றும் நகைச்சுவையாளர்கள் உடன் கல்லூரிப் பேராசிரியர்களும் நடனமாடினர். மேடையில் பேராசிரியர்கள் நடனம் ஆடியதை கல்லூரி மாணவிகள் விசிலடித்து கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்தனர். 

தொடர்ந்து நடிகருடன் செல்பி எடுக்க கல்லூரி மாணவிகள் முற்பட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கிருந்து அவசரஅவசரமாக நடிகர்கள் கிளம்பினர்.

மேலும் படிக்க | தென்னிந்திய படங்களை பார்ப்பதே இல்லை – நவாசுதின் சித்திக் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Leave a Reply

Your email address will not be published.