Tamil Entrepreneurs

SBI வங்கியில் ஹவுஸ் கீப்பிங் பணியில் சேர்ந்து, அதே வங்கியில் அதிகாரியான சாதனை பெண்


மும்பை நகரில் பிரதிக்ஷா டோண்ட்வால்கர் என்ற பெண்மணி தனது 20 வயதில் வங்கியில் துடைத்துப் பெருக்கும் வேலைக்கு சேர்ந்து தன்னுடைய விடா முயற்சியில் தற்போது 37 வருடம் கழித்து வங்கித் துறையில் பெரிய பதவிக்கு உயர்ந்துள்ளார். கணவனை 20 வயதில் இழந்த அவர் 1 மகனோடு பெரிய நகரமான மும்பையில் தனியாகப் பையனுக்காகவும் எப்படியாவது உயர வேண்டும் என்ற எண்ணத்தோடும் உழைத்துக்கொண்டே படித்த கதையைத் தெரிந்துகொண்டால் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் உத்வேகமாக இருக்கும்.

மும்பையில் பாரத ஸ்டேட் வங்கியில் துடைத்துப் பெருக்க வேளைக்குச் சேர்ந்து தற்போது பாரத ஸ்டேட் வங்கி உதவி பொது மேலாளராக பணியாற்றிக்கொண்டு இருக்கும். பிரதிக்ஷா டோண்ட்வால்கர் பல இன்னல்களைத் தாண்டித்தான் அந்த இடத்திற்கு வந்துள்ளார். அவர் 1964இல் புனேவில் பிறந்தவர். குடும்ப வறுமை காரணத்தினால் 16 வயதில் சதாசிவ் என்ற நபருக்கு அவரை திருமணம் செய்து வைத்துள்ளனர். அப்பொழுது அவர் 10 வகுப்பு கூட முடிக்கவில்லை.

பிரதிக்ஷாவின் கணவர் சதாசிவ் மும்பையில் பாரத ஸ்டேட் வங்கியில் புக்பைண்டராக வேலை பார்த்துவந்தார். அதனால் பிரதிக்ஷாவும் மும்பைக்கு வரவேண்டியதாக இருந்தது. ஒருவருடத்தில் இருவருக்கும் பிறந்த விநாயக் என்ற ஆண் குழந்தைக்குக் கடவுளுக்கு நன்றி செலுத்த ஊர் செல்லும்போது நடந்த விபத்தில் அவரின் கணவர் இறந்து விட்டார். அதன் பின்னர் கைக்குழந்தையுடன் தனிமையிலிருந்துள்ளார்.

Also Read :எனது க்யூட்னஸுக்கு இது தான் காரணம் … டயட் ப்ளானைப் பகிரும் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி…

கணவன் வேலை செய்த வங்கியில் சம்பளப் பண நிலுவையை வாங்க வந்த இடத்தில் வேலை கேட்க வங்கி ஊழியர் பிரதிக்ஷாக்கு பகுதி நேரத்தில் பெருக்கி துடைக்கும் வேலையைத் தந்துள்ளனர். அவருக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தபடியால் வங்கி ஊழியர்களிடம் 10வது தேர்வு எப்படி எழுதுவது என்று கேட்டு அறிந்து கொண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளார். வங்கி ஊழியர்கள் அவருக்குப் படிப்பதற்கு ஒரு மாதம் விடுப்பு கொடுத்து உதவியுள்ளனர்.

வங்கியைப் பெருக்கி துடைத்துக் கொண்டு இருக்கும் போது வங்கியில் வேலைசெய்யும் ஊழியர்களைப் பார்த்து தானும் அந்த இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் படிப்பில் கவனம் செலுத்தினர். 12 வகுப்புத் தேர்வை எழுதி முடித்தார். வீடு, குழந்தை என்று ஒரு பக்கம் இருப்பினும் காலையில் வேலை இரவு படிப்பு என்று இரவு கல்லூரியில் சேர்ந்து படித்துள்ளார்.

அவரின் வருமானம் அவருக்கு போதுமானதாக இல்லை. பையனைப் படிக்கவைக்க வேண்டும், அவனுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அளிக்கவேண்டும் என்று எதிர்கால கவலையிலிருந்த அவருக்கு வங்கி பணியில் சேரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அது அவரின் மற்றும் அவர் பையனின் எதிர்காலத்துக்கு நல்லது என்று எண்ணினார். அதனைத் தொடர்ந்து 1995 இல் உளவியல் பிரிவில் இரவு கல்லூரியில் பட்டம் பெற்றார். அதோடு வங்கியில் குமாஸ்தாவாக உயர்வு கிடைத்தது. அதனுடன் நிற்காமல் வங்கி தேர்வுக்காகத் தயாராகி அதில் தேர்வாகி வங்கியில் ஒரு முழு நேர ஊழியராக பணியைத் தொடங்கினர்.

இதன் இடையில் எண்ணற்ற இன்னல்கள் வந்தபோதிலும் தளராது உழைத்த அவரின் வாழ்வில் 1993 இல் பிரமோத் டோண்ட்வால்கர் என்றவரைத் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இரண்டு குழந்தைகள். பிரதிக்ஷாவுக்கு அவரின் கணவர் மற்றும் பிள்ளைகள் மிகவும் உதவிக்காக இருந்துள்ளனர்.

Also Read :சின்னம்மை மற்றும் குரங்கம்மைக்கு வித்தியாசம் தெரியாமல் குழம்பும் மக்கள்… இதுதான் அறிகுறி…

வெறும் மாதம் 65 ரூபாய் சம்பளத்தில் வங்கியில் பணியைத் தொடங்கியவர் 37 ஆண்டுகள் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி தற்போது உதவி பொது மேலாளராக உயர்ந்துள்ளார். அவர் இதனைப் பற்றித் தெரிவிக்கையில் பகிர்ந்த சம்பவம் எல்லா தாய்மார்கள் மனதையும் புலப்படுத்துகிறது. அது அவர் வங்கியில் துடைக்கும் வேலை செய்யும்போது பேருந்தில் ஒரு நிறுத்தம் முன்னிதே இறங்கி நடந்து செல்வாராம். அந்த பணத்தைச் சேர்த்து அவரின் மகனுக்கு பிஸ்கட் வாங்கிக்கொடுப்பாராம்.

ஒரு தாயாக, ஒரு பெண்ணாக, ஒரு ஊழியராக, ஒரு மனைவியாக இந்த சமூகத்தில் பெண்களுக்கு என்று பல்வேறு வேதனைகளும் சோதனைகளும் இருந்தும் கடைசி வரை போராடி விதியை மதியால் வெல்லலாம் என்பதை உறுதிப்படியுள்ளார் பாரத ஸ்டேட் வங்கி உதவி பொது மேலாளரான பிரதிக்ஷா டோண்ட்வால்கர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.Source link

Leave a Reply

Your email address will not be published.