Tamil News

Seeman Gave Answer To Thirumavalavan For election Alliances Issue | திருமாவளவன் பட்ட அசிங்கத்தை நானும் படணுமா? – சீமான் ஆவேசம்


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாலராக சீமான் இருக்கிறார்.நாடாளுமன்றம், சட்டப்பேரவை என எந்தத் தேர்தல் நடந்தாலும் திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்பது அக்கட்சியின் நிலைப்பாடு. ஆனால் நாம் தமிழர் கட்சி அவ்வாறு செயல்படுவதால் வாக்குகள் பிரிந்துவிடுவதாகவும், அது மாநில நலனுக்கு பாதகமாக அமையும் என்றும் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். அதுமட்டுமின்றி நாம் தமிழர் கட்சி பாஜகவின் பி டீம் என்றும் பேசப்படுகிறது.

இந்தச் சூழலில் விசிக தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “எனக்கு திமுகவும் வேண்டாம்; அதிமுகவும் வேண்டாம். காங்கிரசும் வேண்டாம். பிஜேபியும் வேண்டாம். இப்படி எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு என்னத்தை சாதிக்க போகிறீர்கள்? இதைவிட முட்டாள்தனமான முடிவு வேறெதுவும் இருக்காது. எங்களுக்கும் எல்லா கட்சிகளோடும் முரண்பாடு இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் நாங்கள் ஏன் சேர்கிறோம்? பகைவர் பலர் இருக்கலாம் அதில் முதலில் காலி செய்ய வேண்டியது யாரை என்பதை பார்க்க வேண்டும்.

Seeman

இப்போது சனாதன தர்மத்தை தலைதூக்கவிடக்கூடாது. 2024 தேர்தலில் பாஜகவை ஜெயிக்க விடக்கூடாது. அதற்காக பிடிக்காவிட்டாலும் நாமெல்லாம் ஒன்றுசேர வேண்டும். நமக்குள் இருக்கும் பகையை பின்னர் பார்த்துக்கொள்ளலாம். காங்கிரஸ், திமுகவுக்கு நிகரான வாக்கு வங்கி இல்லாவிட்டாலும் அவர்களோடு சேர வேண்டும். ஒரு ஏழே முக்கால் கிராம் தங்கம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நாமும் கால் கிராம் சேர்த்தால்தான் ஒரு சவரன் ஆக முடியும்” என கூறியிருந்தார்.

அவரது இந்தக் கருத்து நாம் தமிழர் கட்சியைத்தான் குறிப்பதாக சமூக வலைதளங்களிலும், அரசியல் பார்வையாளர்கள் மத்தியிலும் பேச்சு எழுந்தது.

மேலும் படிக்க | அரசு செயல்படுவதற்கு நானே ஊக்கி – கமல் ஹாசன் பெருமிதம்

இதனையடுத்து சீமான் கூறுகையில், “திருமாவளவன் சொல்வது சரிதான். அதை நான் ஏற்கவில்லை. ஆனால் திருமாவளவன் ஏற்கனவே சொன்னது மறந்துவிடவில்லை. நான்கு சீட்டுகளுக்கு நடையாய் நடக்க வேண்டியுள்ளது. மண்டியிட வேண்டியுள்ளது, கெஞ்ச வேண்டியுள்ளது என்றீர்களே? திருமாவளவன் பட்ட அந்த அசிங்கத்தை நானும் படணுமா? அவரால் முடியாது என்றால் இருக்கட்டும். 

தம்பி நான் போராடி பார்க்கிறேன். கெஜ்ரிவால் பஞ்சாபிலும், டெல்லியிலும் போராடி வெற்றி பெறவில்லையா? வெற்றி பெற முடியாது என்று சொல்லக்கூடாது. என்னாலும் முடியும். தற்காலிக வெற்றிக்காக நிரந்தர தோல்வியை நான் எதிர்கொள்ள தயாரில்லை. நான் இப்பவே சொல்கிறேன். 2024ஆம் ஆண்டு தேர்தலிலும் தனித்துதான் நிற்பேன். 2026ஆம் ஆண்டு தேர்தலிலும் தனித்துதான் நிற்பேன்” என உறுதிபட கூறினார்.

மேலும் படிக்க | ‘லஞ்ச ஒழிப்புத்துறை அதன் கடமையை தான் செய்கிறது’ – ஓபிஎஸ் கொடுத்த ஷாக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published.