Tamil News

Shocking Ari Komban Elephant Attack Video In Theni Kambam 144 Imposed | மக்களை துரத்திய அரிசி கொம்பன் யானை… அதிர்ச்சி வீடியோ வெளியீடு – 144 தடை உத்தரவு!


Elephant Attack Video: கேரள மாநிலத்தில் 10க்கும் மேற்பட்டோரை கொலை செய்து, மூணாறு பகுதியில் அட்டகாசம் செய்துவந்த அரிசி கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானையை கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானையின் உதவியுடன் பிடித்தனர். இந்த யானையை அரி கொம்பன் என்றும் கேரள பகுதியில் அழைக்கின்றனர். 

தமிழக வனப்பகுதியில்…

யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க யானையின் கழுத்தில் ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்தி தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள பெரியார் புலிகள் வன சரணாலயத்தில் கொண்டு வந்துவிட்டனர். அங்கிருந்து தமிழக வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த அரிசி கொம்பன் யான, தேனி மாவட்டம் ஹவேவிஸ் மேகமலை பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்தது.

தொடர் கண்காணிப்பு 

இந்நிலையில், நேற்றிரவு ரோஜா பூ கண்டம் வழியாக லோயர் கேம்ப் பகுதிக்கு இடம் பெயர்ந்த யானை, கூடலூர் அருகே கழுதை மேட்டுப்பகுதியில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் புகுந்து விவசாய பயிர்களை அழித்து அங்கேயே தஞ்சம் அடைந்து நின்றுள்ளது.

மேலும் படிக்க | ஓசூர் பகுதியில் ஒற்றை யானை அட்டகாசம்

இதனைப் பார்த்த அப்பகுதி விவசாயிகள் வனத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  தகவலை அறிந்து விரைந்து வந்த தமிழக மற்றும் கேரளா வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் அப்போதைக்கு பொதுமக்களையும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களையும் வேறெங்கும் செல்ல விடாமல், அங்கு பணியில் இருந்த பணியாளர்களை வெளியேற்றி யானையின் செயல்பாட்டினை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

பரபரப்பு காட்சிகள் வெளியீடு

விளை நிலங்களுக்குள் புகுந்த அரிசி கொம்பன் யானை அங்கேயே நின்றிருப்பது விவசாயிகளிடம் பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், இன்று காலையில் கம்பம் நகருக்குள் புகுந்த அரிசி கொம்பன் யானை கம்பம் கூலத்தேவர் தெருவில் புகுந்து பொதுமக்களை விரட்டியது.

ஊருக்குள் புகுந்த யானையால் பொதுமக்களுக்கு போலீசார் வாகனங்களில் ஒலி எழுப்பி எச்சரித்து வருகின்றனர். போலீசாரின் எச்சரிக்கை மீறி தெருவில் நின்றிருந்தவர்களை அரிசி கொம்பன் யானை விரட்டும் பரபரப்புக் காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

144 தடை உத்தரவு

கம்பம் நகருக்குள் யானை உலா வருவது குறித்து வனத்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, யானையை வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றன. நாளுக்கு நாள் பல கிலோமீட்டர் கடந்து அட்டகாசம் செய்து வரும் அரிசி கொம்பன் யானையை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.  

இந்நிலையில், தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் அரிசி கொம்பன் காட்டு யானை நடமாட்டத்தின் காரணமாக கம்பம் நகராட்சி பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க |  யானையை கடுப்பேற்றும் நபர்: விமர்சிக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ





Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments