Health

Sivakarthikeyan releases first look poster of AR Murugadoss movie | ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

கடைசியாக ரஜினிகாந்தை வைத்து இயக்கிய தர்பார் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிப் பெறாத நிலையில், இயக்குநர் பணியில் இருந்து ஒதுங்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.அதேநேரத்தில் தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அவரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய பொன்குமார் இயக்கியிருக்கும் 1947 ஆகஸ்ட் 16 என்ற படத்தை தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக், குக்வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | விக்ரம் படத்தில் கமல் கதாபாத்திரம் இதான் – லோகேஷ் கனகராஜ்!

வரலாற்று கதையம்சம் கொண்ட இந்தப் படம், சுதந்திரத்தின்போது ஒரு கிராமத்தில் இளைஞர் ஒருவர் பிரிட்டிஷாரை எதிர்த்து போராடும் உணர்ச்சி மிக்க படமாக உருவாகியுள்ளது. சூட்டிங் நிறைவுபெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இந்த போஸ்டரை வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதற்கு தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னுடைய நன்றியையும் கூறியுள்ளார். 

படம் சிறப்பாக வந்திருப்பதால் பான் இந்தியா படமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் வெளியிட முடிவு செய்திருக்கும் படக்குழு அதற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியவுடன் ரிலீஸ் தேதியை அறிவிக்க இருக்கின்றனர். 

இயக்குநர் முருகதாஸ் தர்பார் படத்துக்குப் பிறகு விஜய்க்கு படம் செய்ய காத்திருந்தார். இதற்காக அவரிடம் கதையைக் கூறி ஓகே வாங்கிய பின்னர், கதையை நிராகரித்துவிட்டாராம் விஜய்.  இதனால் அப்செட்டில் இருக்கும் முருகதாஸ், அடுத்த கதையை உருவாக்கிக் கொண்டிருக்கிறாரம். முன்னணி ஹீரோவுடன் தன்னுடைய படத்தின் அறிவிப்பையும் வெளியிட உள்ளார் என திரைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. 

மேலும் படிக்க | அட்லீ இயக்கத்தில் மீண்டும் விஜய்? உறுதி செய்த அட்லீ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Leave a Reply

Your email address will not be published.