Health

Sivakarthikeyan Wishes For Arun Vijay Son Arnav Birthday Via Twitter | முடிவுக்கு வந்தது அருண் விஜய் சிவகார்த்திகேயன் சண்டை

நடிகர் அருண் விஜய் நீண்ட ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து வருகிறார்.  நடிகர் விஜயகுமாரின் மகனான இருவருக்கு ஆரம்பத்தில் நல்ல படங்கள் வந்து இருந்தாலும், ஒரு கட்டத்தில் சரியான படங்கள் இன்றி தவித்து வந்தார்.  சில ஆண்டுகள் சினிமாவில் இல்லாமலே இருந்தார்.  இப்படி பட்ட சூழ்நிலையில் அருண் விஜய்க்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது அஜித்தின் என்னை அறிந்தால் படம் தான்.  கவுதம் மேனன் இயக்கிய இந்த படத்தில் அஜித்க்கு வில்லனாக விக்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் அருண் விஜய்.  இந்த கதாபாத்திரம் இவரின் வாழ்க்கையை திருப்பி போட்டது.

மேலும் படிக்க | விக்ரம் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் பற்றி போட்டுடைத்த விஜய் சேதுபதி!

அதன் பிறகு குற்றம் 23, தடம் போன்ற வெற்றி படங்களில் நடித்தார்.  2018ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த சீமாராஜா திரைப்படம் வெளியானது.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்திற்கு காலை சிறப்பு காட்சிகள் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.  இதனை கலாய்க்கும் விதமாக அருண் விஜய் “யார் எல்லாம் மாஸ் பண்றதுனு வெவஸ்த இல்லாம போச்சு, தமிழ் ஆடியன்ஸ்க்கு தெரியும் உண்மையான திறமை” என்று டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார். 

av

இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது, பின்பு அருண் விஜய் தனது ட்விட்டர்  ஹேக் செய்யப்பட்டதாக கூறி இருந்தார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் படத்தில் அருண் விஜய்யை கலாய்ப்பது போல் ஒரு காட்சி இடம் பெற்று இருந்தது.  

mrlocal

இவ்வாறு இருவருக்கும் கருத்து மோதல் இருந்து வந்தது.  சமீபத்தில் சென்னையில் தயாரிப்பாளர் ஒருவரது கல்யாணத்திற்கு இருவரும் சென்று இருந்த போது, சிவகார்த்திகேயன் வந்ததால் அருண் விஜய் கூட்டத்தில் ஒரு ஓரத்திற்கு தள்ள பட்டு இருந்தார்.  இதனால், அருண் விஜய் சிவகார்த்திகேயன் மீது மேலும் கோபம் அடைந்ததாக கூறப்பட்டது.  இந்நிலையில், இன்று தனது மகன் அர்னவ் பிறந்தநாளிற்கு அருண் விஜய் அவரது புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.  இதற்கு ரிப்ளை செய்த சிவகார்த்திகேயன், அர்னவ்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு, அவர் நடித்து இருந்த ஓ மை டாக் படத்தையும் பாராட்டி இருந்தார்.  சிவகார்த்திகேயனின் இந்த செயல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.  பதிலுக்கு அருண் விஜய், சிவகார்த்திகேயனுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.  

 

 

மேலும் படிக்க | 12 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Leave a Reply

Your email address will not be published.