Tamil News

Tamil Nadu Child Rights wrote a letter to the Chief Minister | மாணவி உயிரிழப்பு – முதல்வருக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் |


இதுதொடர்பாக முதலமைச்சருக்கு எழுதப்பட்டிருக்கும் கடிதத்தில், “ கடந்த 13 சூலை 2022 அன்று செய்திகளில் கள்ளகுறிச்சி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி தனது பள்ளி விடுதியின் மூன்றாம் மாடியில் இருந்து விழுந்து இறந்த செய்தி கேட்டு அதிர்ந்தோம். மரணமடைந்த குழந்தையின் தாய் ஊடகங்களில் மரணத்தில் இருக்கும் சந்தேகங்கள் குறித்து எழுப்பிய வினாக்களும், அதனை தொடர்ந்து பள்ளிக்கு எதிராக இந்த சம்பவத்திற்கும் இதற்கு முன் இதே பள்ளியில் நிகழ்ந்த்தாக கூறப்படும் மற்ற சந்தேகே மரணங்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கும் நீதி கேட்டு போராட்டங்கள் நடந்ததும், உச்சக்கட்டமாக அந்த போராட்டம் வன்முறையாக மாறி அந்த பள்ளி தீக்கிரையாக்கப்பட்ட சம்பவமும் அனைவரும் அறிந்ததே. இந்த வழக்கு இப்போது CBCID எனம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் இத்த சம்பவத்தில் உண்மை வெளி வரும் என்றும், குழந்தையின் இறப்பிற்கு காரணமான குற்றவானிகள் கண்டிப்பாக கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என நம்புகிறோம். எதிர்பார்க்கிறோம்.

மேலும் படிக்க | 10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து, பீடி புகைக்க வைத்த 6 இளைஞர்கள்!

குழந்தைகளின் உரிமைகளுக்காக தொடர்ந்து இயங்கி வரும் கள செயல்பாட்டாளர்களின் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பான தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம், குழந்தைகளின் கல்வி உரிமைக்காகவும் அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வி உரிமைகளை உறுதி செய்யவும் உழைத்துவரும் சூழலில், இது போன்ற சம்பவங்கள் கல்வி மீதும் பள்ளியின் மீதும் அதிருப்தியை உருவாக்கி பெண்கல்வியில் சமூக நீதியை உயர்த்தி பிடித்து தமிழ்நாடு உருவாக்கி இருக்கும் முன்னேற்றத்தை பின்னோக்கி தள்ளிவிடுமோ என அஞ்சுகிறோம்.

குழந்தைகளின் மகிழ்ச்சியான கல்வி உரிமையை பாகுபாடின்றி அனைவருக்கும் உறுதி செய்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் தங்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு எங்கனின்

ஆலோசனைகளை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம் குழந்தைகள் பாதிக்கப்படும் சம்பவங்களில் அவர்களின் அடையாளங்களை வெளியிடுவது குழந்தைகளின் கண்ணியத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. பாதிக்கப்படும் குழந்தைகளின் அடையாளங்களை வெளியிடுவதை சட்டப்படி தடுக்கும் வகையிலும் அதளை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து அதனை மீறும் தனி நபர்கள், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்கள் மீதும் நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

மேலும் படிக்க | பெண் குழந்தைகளை ஆசிரியர்கள் கவனமுடன் கையாள வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன்

எதிர்காலத்தில் கல்வி நிறுவனங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டால், சிபிரிஐடி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது. நீதியரசர் சதிஷ் குமார் அவர்கள் தமிழக அரசுக்கு புதிய விசாரணை குழுவை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இந்த விசாரணை குழுவில் சம்பத்தப்பட்ட மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் (DCPO), குழந்தை நல குழும (CWC) தலைவர், DSP – பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு மற்றும் குழந்தை உரிமை செயல்பாட்டாளர்களை கொண்ட குழுவாக அமைத்து குழந்தைகளின் உரிமைகளை உணர்ந்த குழுவாக இருக்க ஆவன செய்ய வேண்டும்.

ஒரு நிலையான நடைமுறை வழிக்காட்டுதலை Operating Procedure) தமிழக அரசு உருவாக்கி அரசாணை வெளியிட வேண்டும். கடந்த சில நாட்களாக பள்ளியில் நடந்த மாணவியின் இறப்பு மற்றும் வன்முறையை ஊடகங்கள் வாயிலாக கண்டு கலக்கத்திற்கு உள்ளாகி இருக்க கூடிய அப்பள்ளியின் மாணவர்களுக்கு குழு மற்றும் தனி நபர் ஆற்றுப்படுத்தலை (Group or Individual Counseling) கொடுத்து அந்த பயத்தில் இருந்து வெளி வர உதவ வேண்டும்.

தங்கள் குழந்தைகளின் நலன் மற்றும் எதிர்காலம் கருதி வேறு பள்ளிக்கு மாற விரும்பும் குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்தின் உதவியுடன் வேறு பள்ளிகளுக்கு மாற உதவ வேண்டும். இக்குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர ஊக்குவிக்க வேண்டும்.

மேலும் படிக்க | படுகொலையில் முடிந்த தண்ணீர் பிடி தகராறு… 8 வருடத்திற்கு பிறகு குடும்பத்திற்கே கிடைத்த தண்டனை

பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு கல்வி துறை உருவாக்கி உன்வ இயவா உடதவி எண் 14417 தனியார் பள்ளி மாணவர்களும் பயன்படுத்தும் எண்ணம் விரிவு செய்து தனியார் பள்ளிகளின் முதன்மையான இடங்களில் குழந்தைகளின் பார்வைக்கு படும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்கூ, அதனை பரப்புரை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் நடத்தும் குழந்தைகளுக்கான அனைத்து கல்வி நிலையங்களையும் (State Board, CBSC, ICSE, Kendriya Vidyalaya, Sainik Schools, International School, Tution Centres, Tutorials etc) அமை குழந்தைகளுக்கு வளமான சூழலை அளிப்பதை உறுதி செய்யவும் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் தணிக்கை செய்யவும், கண்காணிக்கவும், தடவடிக்கை எடுக்க குழந்தை உரிமைக்கென செயல்படும் கூட்டமைப்புகளின் பங்களிப்புடன் கூடிய அதிகாரம் கொண்ட மாநில கல்வி துறையின் கீழ் ஒரு அமைப்பை உருவாக்கி குழந்தைகளுக்கான பாதுகாப்பு சேவைகளை ஒருங்கிணைக்க வேண்டும்.

இந்த அனைத்து நிறுவனங்களும் உடல் மன ரீதியான பாதிப்பை உண்டாக்கும் தண்டனைகள், வன்முறை, சுரண்டல், தீங்கிளைத்தல், ஒதுக்குதல், நளிமைப்படுத்தல், பாகுபாடற்ற சூழலை களைத்து மகிழ்ச்சியான சூழலில் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதை உறுதி செய்யவும் பள்ளி குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கொள்கை {School Child Rights Protection Policy) ஒன்றை உருவாக்கி இந்நிறுவனங்களில் பணியாற்றும் அனைவருக்கும் குழந்தை நேய அணுகுமுறைகளையும் பாதுகாப்பு நடைமுறைகளையும் செயல்படுத்த பயிற்சி அளித்து அவர்களை பொறுப்பேற்க செய்ய வேண்டும். மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகள் தங்களது பிரச்சனைகளை பேச குழுக்கள் மற்றும் குறை தீர்வுக்கான வழிமுறைகளையும் குழந்தைகளின் பங்கேற்புடன் உருவாக்கி தீவிரமாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க அரசு முன் வர வேண்டும்.மேற்சொன்ன எங்களது கோரிக்கைகளை ஏற்று குழந்தைகள் கல்வி உரிமை அனைத்து குழந்தைகளுக்கும் வன்முறை அற்ற சூழலில், மகிழ்ச்சியாகவும், எவ்வித பாகுபாடும் இன்றியும் கிடைத்திடவும் அரசு ஆவன செய்ய வேண்டும் என கேட்டுகொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published.