Tamil News

Tamil Nadu Weather Report: Moderate to Heavy Rain Likely, Predicts IMD | தமிழகத்தில் மீண்டும் மழையா? 4 நாட்களுக்கான வானிலை ரிப்போர்ட் இதோ


கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. மழை அதிகம் பெய்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று (23.11.2022) தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய  காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தின் மேல் நகர்ந்து இன்று காலை வலுவிழந்தது. 

வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று (24.11.2022) வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நாளை (25.11.2022) முதல் 28.11.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மேலும் படிக்க | மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி – அரசாணை வெளியிட்டது அரசு

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 

தாமரைப்பக்கம் (திருவள்ளூர்) 10, திருத்தணி (திருவள்ளூர்), காஞ்சிபுரம்  தலா 7, கரூர் (தர்மபுரி), வந்தவாசி (திருவண்ணாமலை) தலா 5, குடியாத்தம் (வேலூர்), கலவை  PWD (ராணிப்பேட்டை), புதுச்சேரி, பூண்டி  (திருவள்ளூர்), ஆரணி (திருவண்ணாமலை) தலா 4, ஊத்துக்கோட்டை  (திருவள்ளூர்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), மாரண்டஹள்ளி (தர்மபுரி), கலவை AWS (ராணிப்பேட்டை), திருத்தணி  PTO (திருவள்ளூர்) தலா 3, சோழவரம் (திருவள்ளூர்), திருவள்ளூர், வெம்பாக்கம் (திருவண்ணாமலை), திருவாலங்காடு (திருவள்ளூர்), அரக்கோணம் (ராணிப்பேட்டை), கிருஷ்ணகிரி, பரூர் (கிருஷ்ணகிரி), திருப்பத்தூர், பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), எடப்பாடி (சேலம்), ஆற்காட் (ராணிப்பேட்டை), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), காட்பாடி  (வேலூர்), தலா 2, பாலக்கோடு (தர்மபுரி), பொன்னேரி (திருவள்ளூர்), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), தளி (கிருஷ்ணகிரி), தர்மபுரி  PTO (தர்மபுரி), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), அம்முண்டி (வேலூர்), வாலாஜஹ் (ராணிப்பேட்டை), செய்யார் (திருவண்ணாமலை), தேன்கனிகோட்டை (கிருஷ்ணகிரி), ஆம்பூர்  (திருப்பத்தூர்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), போலூர்  (திருவண்ணாமலை), வேலூர், ஆவடி  (திருவள்ளூர்), ரெட் ஹில்ஸ்  (திருவள்ளூர்), பையூர் AWS (கிருஷ்ணகிரி), ஆலங்காயம்   (திருப்பத்தூர் ) தலா 1.  

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை

சமீபத்திய வானிலை தகவல் பற்றி மேலும் தெரிந்துகொள்ள mausam.imd.gov.in/chennai   இணையதளத்தை காணவும். 

மேலும் படிக்க | சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவின் பணியிட மாற்றத்தை ரத்து செய்க 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 





Source link

Leave a Reply

Your email address will not be published.