Tamil Entrepreneurs

The woman who took her husband on a bike in her old age – viral video | வயதான காலத்தில் தனது கணவரை பைக்கில் அழைத்து சென்ற பெண்


பெண் ஒருவர் வயதான ஒருவரை பின்னால் அமர்த்தி ரைட் போகும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிறது. எப்போதும் பெண்கள் பின்னாடி தான் இருக்க வேண்டுமா? நாங்களும் கெத்தாக இருப்போம் என்பது போன்ற கருத்துக்களை நெட்டிசன்கள் பகிர்ந்துவருகின்றனர்.

புதுமணத் தம்பதிகளுக்கு இடையே இருக்கும் அன்பை விட வயதானத் தம்பதிகளுக்கு இடையே இருக்கும் அன்பும்,புரிதலும் அளப்பெரியதாகவே இருக்கும். ஆரம்பத்தில் கணவருடன் சேர்ந்து பைக்கில் ஊரை வலம் வந்த பெண்கள் படும் சந்தோஷத்தை விட வயதான காலத்தில் தன்னுடைய மனைவி எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் தன்னைக் கவனித்துக்கொள்வதோடு, பைக்கில் அவரே ரைடு கூட்டிச்சென்றால் சொல்லவா வேண்டும். மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அப்படியொரு நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியதோடு இணையத்திலும் அந்த வீடியோ வைரலாகிறது.

புகைப்படங்களை எடுப்பதில் ஆர்வமுள்ள கலைஞர் சுஸ்மிதா டோரா என்பர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். இதில் வயதானத் தம்பதிகள் இருவர் கிராம புற சாலைகளில் வண்டியை ஓட்டிச் செல்வதுப் போன்று ஆரம்பிக்கிறது. இதில் என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா? வண்டியை ஓட்டிச் சென்றது ஆண் அல்ல வயதான பெண்மணி தான்.

இருவரும் பாரம்பரிய உடையில் அதாவவது அப்பெண் புடவை அணிந்தும், ஆண் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்தும் டிவிஎஸ் பைக்கில் செல்கின்றனர். இந்த வீடியோ எங்கு எடுத்தது? யார் இவர்கள் என்று தெரியவில்லை. ஆனால் வண்டியின் நம்பரைப் பார்த்தால் தமிழ்நாடு என்று மட்டும் தெரிகிறது. இதில் ஒன்று புதிதல்ல. ஆனால் வயதான காலத்திலும் ஊரினுள் வண்டியில் ஏற்றி உலா வருவது தான் நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது.

 

வீடியோ பதிவிட்ட சில வாரங்களிலேயே இதுவரை 3.7 மில்லியன் பார்வையாளர்களை இந்த வீடியோ கவர்ந்துள்ளது. மேலும் இந்த வீடியோவைப் பார்த்த இன்ஸ்டாகிராம் பயனர்கள், இந்த வீடியோவைப் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது என்றும், ஏன் பெண்கள் தான் எப்போதும் பின்னால் இருப்பார்கள். இது மிகவும் அபிமானமானது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் என் கணவருக்கு கூட பைக் ஓட்டத் தெரியாது வெளி இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் நான் தான் ஓடிச்செல்வேன் என்றும், இதில் எந்த புது விஷயமும் இல்லை என்று இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது பெண்கள் விமானங்களை சுலபமாக இயக்கும் போது, சாதாரண பைக் என்றால் சும்மா விடுவார்களா? அதான் புகுந்து விளையாடுகிறார்கள் என்பது போன்ற கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். மேலும் தென்னிந்தியாவில் இதெல்லாம் சகஜம் என்றும் அதிலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கிராமத்தில் உள்ள பெண்கள் முதல் நகரத்தில் உள்ள பெண்கள் வரை டூவிலர்களை ஓட்டுவதில் திறமைசாலிகள் என்றும் நெட்டிசன்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Read More: எனக்கும் பலூன் கொடுங்க… காத்திருந்து பலூனை வாங்கிய நாயின் க்யூட் வீடியோ

என்ன இருந்தாலும் இந்த வயதான ஜோடிகள் போகும் ரைடு காட்சி வீடியோக்கள் ரசிக்கும்படியாகவே அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.





Source link

Leave a Reply

Your email address will not be published.