Tamil News

Thunivu Movie 3Rd Single Gangstaa Song Lyrics Out Now | ‘வா பதிலடிதான் தெரியுமடா உனக்கு சம்பவம் இருக்கு’ – வெளியானது துணிவு பாடல் லிரிக்ஸ்


ஹெச்.வினோத்துடன் அஜித் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் துணிவு. இருவரும் இணைந்த நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்கள் வசூல் ரீதியாக கொண்டாடப்பட்டாலும் விமர்சன ரீதியாக முழு வரவேற்பை பெறவில்லைஇதன் காரணமாக இந்தப் படம் மூலம் அஜித்தும், வினோத்தும் தங்களை நிரூபிக்க காத்திருக்கின்றனர். க்ரைம் சம்பந்தப்பட்ட கதை எனவும், முழுக்க முழுக்க அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார் எனவும் பரவலாக பேச்சு எழுந்திருக்கிறது.

இதற்கிடையே வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. இதன் காரணமாக இந்த பொங்கல் ரேஸில் யார் வெல்லப்போகிறார் என்பதை காண திரையுலகம் ஆவலாக இருக்கிறது. ரசிகர்களும் தங்களுக்குள்ளான கருத்து மோதல்களை சமூக வலைதளங்களில் தொடங்கியிருக்கின்றனர். அதற்கேற்றார்போல் வாரிசு தயாரிப்பாளர் தில்ராஜுவின் கருத்து சர்ச்சையாக அதற்கும் அஜித் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

இந்தச் சூழலில் இரண்டு படங்களிலிருந்தும் பாடல்களும், அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. சில நாள்களுக்கு முன்பு துணிவு படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது. அதற்கு அடுத்ததாக வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் வெளியனது.

மேலும் வாரிசு படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி 24ஆம் தேதி பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது.  இந்நிலையில் துணிவு படத்தில் இடம்பெற்றிருக்கும் கேங்ஸ்டா என்ற பாடலின் வரிகள் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. 

பாடலின் வரிகள் பின்வருமாறு:

சீண்டுனா சிரிப்பவன்
சுயவழி நடப்பவன்
சரித்திரம் படைப்பவன்
He’s Like A Gangsta, He’s A Gangsta

பகைவனுக்கு இரக்கப்பட்டு
பணிஞ்சுபோற துணிவுகொண்டு
பயணம் செய்யும் குணம் கொண்டவன்
He’s Like A Gangsta, He’s A Gangsta

நீதி காக்கும் நேர்மை கொண்டவன்
He’s A Gangsta
அநீதி கண்டு பொங்கி எழுபவன்
He’s A Gangsta
பெத்தப்பொண்ண காக்கும் அப்பனும்
கூட Gangsta
தாலாட்டும் தாய் சீறும்போதும்
Who The Who the Gangsta

I Said, who the Gangsta
Comon comon சொல்லு
who the gangsta
ha ha tell me who the gangsta

நம்பிக்கை இழக்காமல்
போர்த்தொடுப்பவன்
IT’S HIM IT’s HIM
கடைசி நிமிடம்வரை கரம் கொடுப்பவன்
வன்முறை தெரிந்தும் கண்ணில் அமைதி கொண்டவன்
வங்கக்கடலின் ஆழம் தெரிந்தும் இறங்குனா
HE’s A Gangstaa

துணிஞ்சா வெற்றி நமதே
வா பதிலடிதான் தெரியுமடா
உனக்கு சம்பவம் இருக்கு
பார் முடிவில் யார் பதிலடிதான்
இனிமே பிரச்சனை எதுக்கு
அச்சத்த விலக்கி உச்சத்த பிடிச்சு
தடைய ஒடச்சு பயத்த செரிச்சு
ஊருக்குள்ள உள்ள மொத்த பயபுள்ள
எதிர்த்து நிக்கட்டும்
IAM Gangsta
No Guts No Glory

இவ்வாறு வரிகள் இடம்பெற்றுள்ளன. பாடலானது டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகிறது.

மேலும் படிக்க | பில்லா படத்தில் கவர்ச்சிக்கு என்ன காரணம்?… நயன் ஓபன் டாக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ





Source link

Leave a Reply

Your email address will not be published.