Tamil Entrepreneurs

Trending | இனி திருட முடியாது – பாதுகாப்பு அம்சத்துடன் இ-சைக்கிள் உருவாக்கியுள்ள அஸ்ஸாம் இளைஞர்


புதிய கண்டுபிடிப்புகளை பெரும் நிறுவனங்கள் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. திறமையும், ஆர்வமும் கொண்ட வெகுஜன மக்களும் கண்டறியலாம் என்பதற்கு பல்வேறு நிகழ்வுகள் உதாரணமாக இருக்கின்றன. அந்தப் பட்டியலில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சாம்ராத் நாத் இணைந்திருக்கிறார். இவர் அந்த மாநிலத்தின் கரீம்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர்.

திருட்டுக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இ-சைக்கிள் ஒன்றை உருவாக்கியுள்ளார் அவர். இதுகுறித்து சாம்ராத் நாத் கூறுகையில், “சைக்கிளை யாரேனும் திருட முயற்சித்தால், உடனடியாக எனது ஃபோனுக்கு மெசேஜ் வந்துவிடும். அத்துடன் அலாரமும் அடிக்கும்’’ என்று தெரிவித்தார். இவர் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ஐடிஐ-யில் தொழில்நுட்பக் கல்வி பயின்று வருகிறார்.

இ-சைக்கிளை எங்கிருந்து வேண்டுமானாலும் கட்டுப்படுத்தக் கூடிய வகையில் ஆப் ஒன்றையும் சாம்ராத் நாத் உருவாக்கியுள்ளார். ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கி.மீ. தொலைவு வரையிலும் சுமார் 40 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் இந்த சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த பகுதிக்கு சென்றாலும் சைக்கிளை ஆப் மூலமாக இயக்க முடியும் என்றும், அதன் லைவ் லொகேஷனை தெரிந்து கொள்ள முடியும் என்று சாம்ராத் நாத் தெரிவித்தார்.

சிறு வயது கனவு

பைக் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது சாம்ராத் நாத்தின் சிறு வயது கனவு ஆகும். இந்நிலையில், 4 ஆண்டுகள் முயற்சிக்குப் பின்னர் இ-சைக்கிளை அவர் உருவாக்கியுள்ளார். இதில் திருடர்களைக் கண்டறிவதற்கான சென்சார் மற்றும் டிராக்கிங் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளது. பயன்படுத்தப்பட்ட லேப்டாப்களில் இருந்து எடுக்கப்பட்ட லித்தியம் ஐயன் பேட்டரியை மறுசுழற்சி செய்து இந்த சைக்கிளுக்கான பேட்டரி தயாரிக்கப்பட்டுள்ளது.

சாதனையாளர்களைக் கொண்ட கரீம்கஞ்ச்

அஸ்ஸாம் மாநிலத்தில் சாம்ராத் நாத் வசிக்கும் கரீம்கஞ்ச் பகுதியில் இருந்து வேறுசில புத்தாக்க சிந்தனையாளர்களும் அண்மைக் காலங்களில் வெளி உலகிற்கு தெரிய வந்தனர். இப்பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவர் அன்குரித் கார்மாகர் என்னும் மாணவர் அண்மையில் எலெக்ட்ரானிக் ஷூ ஒன்றை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் கண்டறிந்தார்.

 

 

 

இந்த ஷூவை அணிந்து கொண்டு நடந்து செல்லும்போது, எதிரே 5 மீட்டர் தொலைவு வரை உள்ள பொருட்களை சென்சார் மூலமாக கண்டறிந்து, அது எச்சரிக்கை ஒலி எழுப்பும். பார்வையற்றவர்கள் இந்த ஷூவை அணிந்து கொண்டு நடந்து செல்லும் பட்சத்தில், அவர்களது பாதையில் உள்ள இடர்பாடுகள் மற்றும் ஆபத்துகளை அறிந்து கொள்ள முடியும்.

ஒரு காலின் ஷூவில் மட்டும் இதைப் பயன்படுத்தினால் போதுமானது என்றும், மற்றொரு காலில் எப்போதும் போல சாதாரண ஷூ அணியலாம் என்றும் மாணவர் அன்குரித் கூறியிருந்தார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.





Source link

Leave a Reply

Your email address will not be published.