அதன்படி பச்சிளம் குழந்தைகளுக்கு பிசிஐ தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து, ஹெபாடைடிஸ்-பி தடுப்பூசி ஆகியவை உரிய நேரத்தில் செலுத்தப்பட வேண்டும். இதேபோல் குழந்தை பிறந்த 6 வாரம், 10வது வாரம், 14 வாரங்களில் செலுத்த வேண்டிய தடுப்பூசிகள் மிக அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். 9வது மாதத்தில் MMR அல்லது MR தடுப்பூசியும் கட்டாயம் ஆகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த தடுப்பூசிகளுக்கு இடையே சின்னம்மை, டைபாய்டுக்கு எதிரான தடுப்பூசிகளையும் போடலாம் என குறிப்பிடும் மருத்துவர்கள், ஆனால் இவை கட்டாயம் இல்லை என தெரிவிக்கின்றனர். கொரோனாவை காரணம் காட்டி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை தள்ளிப்போடக் கூடாது என்றும், அது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் படிக்க… மீண்டும் டாஸ்மாக் திறப்பு – தவறான முடிவா? தவிர்க்க முடியாததா ?
உரிய நேரத்தில் குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிதான் பாதுகாப்பை உறுதி செய்யும் என்பது மருத்துவர்களின் அறிவுரை ஆகும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.