Health

Vignesh Shivan Says Birthday Wishes To Nayanthara Mother | “நீங்கள் இன்னொரு தாய்”… நயன் அம்மாவுக்கு விக்னேஷ் சிவன் உருக்கமான வாழ்த்து

நானும் ரௌடிதான் படத்தில் நடித்ததன் மூலம் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார் நயன்தாரா. இருவரும் ஒரேவீட்டில் இருந்துவந்த சூழலில் இவர்களது திருமணம் ஜூன் 9ஆம் தேதி நடந்தது. மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக நடந்த இத்திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், மணிரத்னம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் இந்தத் திருமணத்தில் ரஜினிகாந்த் தாலி எடுத்துக்கொடுத்ததாக தகவல் வெளியானது. இதற்கிடையே, தங்களது திருமணத்தையொட்டி தமிழ்நாட்டில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இருவரும் உணவு ஏற்பாடு செய்தனர். அவர்களது இந்த செயல் பரவலான வரவேற்பைப் பெற்றது. திருமணத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், உங்களது ஆதரவும் அன்பும் தொடர்ந்து எங்களுக்கு வேண்டுமென்று வேண்டுகோள் வைத்தனர்.

இதனையடுத்து நயனும், விக்னேஷ் சிவனும் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றனர். அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகின. ஹனிமூனை முடித்திவிட்டு நாடு திரும்பிய நயன், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் பாடலையும், தொடக்க நிகழ்ச்சியையும் இயக்கினார். மேலும் அஜித் படத்தின் கதை விவாதத்திலும் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது.

Vignesh Shivan, Nayan Mom

தொடர்ந்து இருவரும் சிறிய பிரேக் எடுத்துக்கொண்டு ஸ்பெயினுக்கு சென்றனர். அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகின. தங்களது டூரை முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பியிருக்கும் அவர்கள் தங்களது வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர்.

இந்நிலையில் நயன்தாராவின் அம்மா நேற்று பிறந்தநாள் கொண்டாடியதையொட்டி அவருக்கு உருக்கமான வாழ்த்து தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். நயனின் அம்மாவான ஓமணகுரியனுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பகிர்ந்து, “அன்புள்ள ஓமனகுரியன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

 

என் மற்றொரு தாய். நான் மிகவும் நேசிக்கும் ஒரு பெண். எப்போதும் தூய்மையான ஆன்மா, அழகான இதயம். நீங்கள் நல்ல ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி மற்றும் நிறைய ஆசீர்வாதங்களுடன் வாழ கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | வெந்து தணிந்தது காடு படம் பாக்குறதுக்கு முன்னால எல்லாரும் தூக்கத்த போடு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published.