Health

Vikram’s Cobra is releasing on Viruman Release Date | கோப்ராவை முந்தும் விருமன்! கார்த்தி டீமின் அதிரடி முடிவு

நடிகர் கார்த்தி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் விருமன். முத்தையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படத்தில் இயக்குநரின் சங்கரின் மகள் அதிதி சங்கர், நடிகர் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்துள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சரண்யா பொன்வண்னன், சூரி, கருணாஸ், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கிராமத்து கதைக்களத்தை பின்னணியாக கொண்டு உருவாகியிருக்கும் விருமன் படத்தில் இருந்து ஏற்கனவே ‘கஞ்சாப்பூ கண்ணாலே’ பாடல் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | மிகப்பெரிய மன உளைச்சலில் இருந்தேன் – அபர்ணா பாலமுரளி ஷேரிங்ஸ்

பாடலை சித்ஸ்ரீராமும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து பாடியுள்ளனர். பாடலும், டீசரும் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு முன்பு திட்டமிட்டிருந்தது. ஆனால், ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட கோப்ரா, அந்த தேதியில் ரிலீஸ் செய்யாமல், தங்களின் தேதியை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் கிராபிக்ஸ் பணிகள் நிறைவடையாததால், கோப்ரா ரிலீஸ் தேதியை மாற்ற படக்குழு முடிவெடுத்துள்ளது. இது விருமன் படத்தின் வசூலுக்கு பாதிப்பாக அமையும் என்பதால், திட்டமிட்ட தேதிக்கு முன்னதாக ரிலீஸ் செய்ய விருமன் டீம் யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கோப்ரா படத்தில் 7 வெவ்வேறு கதாப்பாத்திரங்களில் விக்ரம் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். ரெட்ஜெயண்ட் மூவீஸ், தமிழகத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியிருக்கிறது. மிகப்பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் என்பதால், அதற்கேற்ப காட்சிகளின் கிராபிக்ஸ் பணிகளை படக்குழு மேம்படுத்தி வருகின்றனர். இதுவே படத்தின் ரிலீஸ் தாமத்துக்கான காரணமாகவும் இருக்கிறது. ஒருவேளை விருமன் படக்குழு ரிலீஸ் தேதியை மாற்றவில்லை என்றால், கோப்ராவுடன் நேருக்கு நேர் மோத வேண்டியிருக்கும். 

மேலும் படிக்க | தேசிய விருதுப் பெற்ற நஞ்சியம்மாவின் ‘குரல்’ சொல்லும் கதை.!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Source link

Leave a Reply

Your email address will not be published.