Health

Vikram’s Ponniyin selvan Character Photo goes on viral | சோழா டீ To சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஆதித்த கரிகாலன் வைரலாகும் விக்ரம் புகைப்படம்

தமிழ் இலக்கியத்தில் வைர கல் என புகழப்படும் பொன்னியின் செல்வன் நாவல் படமாகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். விக்ரம், பிரகாஷ் ராஜ், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என நட்சத்திர பட்டாளம் நடிக்கிறது.

படமானது இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது.பொன்னியின் செல்வனை படமாக்க வேண்டுமென்ற எம்ஜிஆர், கமல் ஹாசன் ஆகியோரின் முயற்சிகள் தோல்வியடைய அதனை மணிரத்னம் கையில் எடுத்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

Ponniyin selvan

செப்டம்பர் 30ஆம் தேதி படம் வெளியாக இருக்கும் சூழலில் இதன் டீசர் விரைவில் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கிடையே சமீபத்தில், ‘சோழன் வருகிறார்ன்’ என கேப்ஷனிட்டு ரஹ்மான் பின்னணி இசையோடு பொன்னியின் செல்வன் தொடர்பாக வீடியோ வெளியானது. அந்த வீடியோ ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

இந்நிலையில் ஆதித்த கரிகாலனாக விக்ரம் நடிக்கும் சூழலில் அவரது புகைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இதனைக் கண்ட பலரும் ஆதித்த கரிகாலனாக விக்ரம் மிளிர்கிறார் என கூறி பகிர்ந்துவருகின்றனர்.

மேலும் படிக்க | சுப்ரமணியபுரம் – சுயநலங்களால் ரத்தத்தில் நனைந்த பூமி

அதேசமயம் விக்ரமின் இன்னொரு புகைப்படமும் அதிகளவு பகிரப்பட்டுவருகிறது. விக்ரம் மிகவும் கஷ்டப்பட்டே சினிமாவுக்குள் நுழைந்தவர். சினிமா வாய்ப்புகள் கிடைக்காத நாள்களில் டப்பிங் கொடுப்பது, விளம்பரப் படங்களில் நடிப்பது என செயலாற்றிக்கொண்டிருந்தார்.

Karthi

அப்படி அவர் சோழா டீ என்ற விளம்பரத்தில் நடித்தார். அதில் ராஜா கெட்டப்புடன் விக்ரம் இருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருக்கும்.

தற்போது ஆதித்த கரிகாலன் கெட்டப்பில் இருக்கும் பொன்னியின் செல்வன் விக்ரம் புகைப்படத்தையும், சோழா டீ விளம்பரத்தில் அவர் மன்னன் கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தையும் ரசிகர்கள் வைரலாக்கிவருகின்றனர்.

மேலும்,சோழா டீ விளம்பரத்திலிருந்து சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஆதித்த கரிகாலன் எனவும் கேப்ஷனிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Leave a Reply

Your email address will not be published.