இந்நிலையில் சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவட்ட ரிசர்வ் காவல்படையை (DRGF – District Reserve Guard force) சேர்ந்த வீரர் ஒருவர், கர்ப்பிணி பெண்ணை உள்ளூர் மக்களுடன் சேர்ந்து கட்டிலில் பல கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்று ஒரு சிறந்த முன்மாதிரி ஜவான்களில் ஒருவராக மாறி இருக்கிறார்.
முதலில் குறிப்பிட்ட பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் நக்சலைட்டுகளால் சேதமடைந்த சாலைகள் காரணமாக ஆம்புலன்ஸால் கிரமத்திற்குள் நுழைந்து பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. நேரம் செல்ல செல்ல கர்ப்பிணி பெண்ணிற்கு வலி அதிகரித்து கொண்டே சென்றது. விபரீதம் நிகழ்வதற்கு முன் ஒரு கட்டிலில் கர்ப்பிணி பெண்ணை படுக்க வைத்து தூக்கி சென்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உள்ளூர்வாசிகள் முடிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து அந்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் முயற்சியில் உள்ளூர் கிராமவாசிகளுடன் சேர்ந்து, குறிப்பிட்ட மாவட்ட ரிசர்வ் காவலரும் கர்ப்பிணிப் பெண்ணோடு சேர்த்து கட்டிலை தூக்கி சென்றுள்ளார். கிராமவாசிகளுடன் சேர்ந்து வனப்பகுதி வழியே பல கிலோ மீட்டர்கள் மாவட்ட ரிசர்வ் காவல்படையை சேர்ந்த வீரரும், கர்ப்பிணி பெண்ணோடு சேர்த்து கட்டிலை சுமந்து செல்லும் காட்சிகள் அடங்கிய சமீபத்திய வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தண்டேவாடாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
#WATCH A jawan of the District Reserve Guard force along with locals carried a pregnant woman on a cot to help her reach the hospital in Dantewada, Chhattisgarh
The woman and her newborn baby are in good health, said IG Bastar P Sundarraj pic.twitter.com/erQJyEMT8G— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) April 20, 2022
மனதை நெகிழ வைக்கும் இந்த வீடியோவில் கர்ப்பிணிப் பெண் கட்டிலில் படுத்திருக்க, அந்த ஜவான் ஒரு கையில் துப்பாக்கியையும் மற்றொரு கையில் கட்டிலையும் ஏந்தி முன்னால் நடந்து செல்வதை இந்த வீடியோ காட்டுகிறது. ஜவானின் பின்புறம் இன்னொருவர் கட்டிலை பிடித்தபடி நடந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் பின்னால் இன்னும் இரண்டு, மூன்று பேர் நடந்து வருகிறார்கள். ஒருவழியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்து தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ALSO READ | ஆடைகளுக்கு பாலின வேறுபாடு கிடையாது – தாடி, மீசையுடன் புடவையில் வலம் வரும் இளைஞர்!
கர்ப்பிணிப் பெண்ணை ஜவான் சுமந்து செல்லும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாக பரவி பலரை கவர்ந்து வருகிறது. சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் துரிதமாக செயல்பட்டு பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க உதவிய அந்த ஜவானுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.