Tamil Entrepreneurs

Viral Video | பேரக்குழந்தைகளுக்கு தாத்தா – பாட்டி கொடுத்த சர்ப்ரைஸ்… வைரல் வீடியோ!


தாத்தா – பாட்டி மற்றும் பேரக்குழந்தைகள் இடையிலான பந்தம் என்றும் அற்புதமானது. ஒவ்வொருவரது குழந்தை பருவத்தை சுவாரஸ்யமாக்குவது அவர்களது தாத்தா, பாட்டியாக தான் இருக்க முடியும். தங்கள் மனதில் தோன்றும் சந்தேகங்கள், விருப்பங்களை தாத்தா, பாட்டிகளோடு தயங்காமல் பகிர்ந்து கொள்வார்கள். அடம்பிடிக்கும் குழந்தையை சாப்பிட வைப்பது, கதை சொல்லி தூங்க வைப்பது, வீட்டிற்கு யாராவது வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கற்றுத்தருவது என தாத்தா , பாட்டிக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் இடையே நிறைய விஷயங்கள் உள்ளன.

தாத்தா-பாட்டிகளுடன் வளரும் குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட தனிமை, பதற்றம், மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஆனால் கூட்டுக்குடும்பங்களை போற்றி வளர்த்த இந்தியாவில் கூட தற்போது தனிக்குடித்தனம் என்பது இயல்பானதாக மாறிவிட்டது. நகரங்களில் புலம் பெயர்ந்து வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் பலரும் தங்களது பிள்ளைகளுக்கு தாத்தா, பாட்டி அருகாமையின் அருமை தெரியாமலேயே வளர்க்கின்றனர்.

இங்கேயே இப்படி என்றால் முற்றிலும் இயந்திரமயாமாக்கப்பட்ட வெளிநாட்டு கலாச்சாரத்தை சொல்லத் தேவையில்லை. பெரும்பாலான வெளிநாடுகளில் வளரும் குழந்தைகளுக்கு தங்களது தாத்தா பாட்டியை பார்க்கும் வாய்ப்பே சில முறைகள் மட்டும் தான் கிடைக்கிறது. எனவே அத்தி பூத்தார் போல் நடக்கும் அந்த அற்புத சந்திப்புகள் உணர்ச்சி மிக்கவையாக மாறிவிடுகிறது.

ALSO READ | இதில் எத்தனை வார்த்தைகள் மறைந்திருக்கிறது ? கண்டுப்பிடிச்சிட்டா புத்திசாலி தான்..

பல ஆண்டுகளாக தாத்தா பாட்டியை பார்க்காமல் இருந்த குழந்தைகள் திடீரென அவர்களை வீட்டு வாசலில் கண்டதும் உற்சாகமடையும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ‘குட்நியூஸ் கரஸ்பான்டெண்ட்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாத்தா – பாட்டி மற்றும் பேரக்குழந்தைகள் இடையிலான ரீயூனியன் வீடியோ இதயத்தை உருக்கும் விதமாக உள்ளது.

 

 

அந்த வீடியோவில் 3 பேரக்குழந்தைகள் ஆவலுடன் வீட்டின் கதவை திறக்க ஓடி வருகின்றன. அப்போது அந்த பிள்ளைகளின் அம்மா அவர்களுக்கு வெளியே ஒரு சர்ப்ரைஸ் காத்திருப்பதாக கூறுகிறார். ஆசையுடன் கதவை திறந்து பார்க்கும் குழந்தைகள் வெளியே தங்களது தாத்தா, பாட்டி நிற்பதை பார்த்து ஆனந்த கூச்சலிடுகின்றனர். பாட்டி மற்றும் தாத்தாவை மூன்று குழந்தைகளும் மாறி, மாறி கட்டித்தழுவி தங்களது ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் சர்ப்ரைஸ்: தாத்தா – பாட்டி சில வருடமாக பிரிந்திருந்த 3 பேரக்குழந்தைகளையும் சந்தித்து ஆச்சர்யமூட்டுகின்றனர்” என பதிவிடப்பட்ட வீடியோவை இதுவரை 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். ஆயிரக்கணக்கான கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

ALSO READ | ட்விட்டரில் சைலன்ட் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘ட்விட்டர் சர்க்கிள்’அம்சம் – என்ன பயன்?

 

இன்ஸ்டாகிராம் யூஸரில் ஒருவர் “பேரக்குழந்தைகளுடன் தாத்தா, பாட்டி இருப்பது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது” என பதிவிட்டுள்ளார். மற்றொருவர் ‘தாத்தா பாட்டியின் அன்பு வார்த்தைக்கு அப்பாற்பட்டது’ என பதிவிட்டுள்ளார். அடுத்தவர் “இந்த வீடியோவை பார்க்கும் போது எனது இதயம் நிறைந்துவிட்டது. பெற்றோர்களின் அடுத்தக்கட்ட கடமை தாத்தா- பாட்டியாக மாறுவதாக தான் இருக்க முடியும்” என பதிவிட்டுள்ளார். இப்படி இந்த உணர்ச்சிப்பூர்வமான ரீ -யூனியனை பற்றி கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.Source link

Leave a Reply

Your email address will not be published.