மாணவ, மாணவிகளிடம் இருக்கும் திறமை, ஆர்வம் ஆகியவற்றை ஆசிரியர்கள் அங்கீகரித்து ஊக்குவிக்கும் போது, அவர்கள் அதை மென்மேலும் வளர்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கிறது. வெறுமனே கல்வியை மட்டும் போதிக்கப்படும்போது ஒருவித மன அழுத்தங்களுக்கு மாணவ, மாணவிகள் ஆளாகின்றனர் என்ற நிலையில், விளையாட்டு, கலைத்திறன் போன்ற நிகழ்வுகளில் மாணவ, மாணவிகளை ஈடுபடச் செய்யும்போது அவர்கள் புத்துணர்ச்சி அடைகின்றனர்.
தற்போது ட்விட்டரில் வைரல் ஆகி வரும் வீடியோ ஒன்று இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. சின்னஞ்சிறு பள்ளி மாணவியுடன், ஆசிரியை ஒருவர் நடனமாடுவது குறித்த காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
டெல்லியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இங்கு ஆசிரியையாக பணி புரியும் மனு குலாதி என்பவர், ட்விட்டரிலும் பிரபலமானவராக இருக்கிறார்.
Students love to be teachers. They love role reversal.
“मैम आप भी करो। मैं सिखाऊंगी।”
English lang teaching followed by some Haryanvi music- A glimpse of the fag end of our school day.☺️💕#MyStudentsMyPride #DelhiGovtSchool pic.twitter.com/JY4v7glUnr— Manu Gulati (@ManuGulati11) April 25, 2022
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே நடைபெறும் நெகிழ்ச்சியான நிகழ்வுகள், மாணவர்களுக்கு நல்வழிக் காட்டும் வீடியோக்கள் என பலவற்றை தொடர்ந்து ட்விட்டரில் வெளியிட்டு வரும் ஆசிரியை மனு குலாதிக்கு டிவிட்டரில் 19,000 ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர். அவரது பல வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன.
மாணவியுடன் நடனம்
வகுப்பறையில் ஆங்கில மொழிக் கல்விக்கு இடையே மாணவியுடன் ஆசிரியை மனு குலாதி நடனமாடுகிறார். அப்போது பிற மாணவியர்கள் கை தட்டி அவர்களை உற்சாகப்படுத்துகின்றனர். இதுகுறித்த வீடியோவை “மாணவிகள் ஆசிரியர்களாக இருக்க விரும்புகின்றனர். கதாபாத்திரம் மாற்றியமைக்கப்படுவதை அவர்கள் விரும்புகின்றனர்’’ என்ற தலைப்பில் அவர் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, மாணவி நடனமாடுவதைப் பார்த்து அதற்கேற்ப ஆசிரியை நடனமாடுகிறார்.
இந்த வீடியோ ட்விட்டரில் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிடப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். ஆசிரியை மற்றும் மாணவி இடையிலான அழகிய பந்தத்தை பாராட்டி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ | ஸ்மார்ட்போனுக்கு அடிக்ட் ஆன கொரில்லா குரங்கு – யூ டியூப் வீடியோ பார்க்கிறதாம், செல்ஃபி எடுத்துக் கொள்கிறதாம்
ட்விட்டர் யூசர் ஒருவர் வெளியிட்ட கமெண்டில், “ஆசிரியை மற்றும் மாணவி இடையிலான இந்த பந்தம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. ஆசிரியை ஆகிய உங்களுக்கு நிறைய வாழ்த்துக்கள். உங்கள் கடமையை நீங்கள் முழுமையாக நிறைவேற்றி வருகிறீர்கள்’’ என்று கூறியுள்ளார்.
ஆசிரியை மனு குலாதி செய்வதைப் போன்று, மற்ற ஆசிரியர்களும் மாணவ, மாணவிகளின் கலைத்திறனை ஊக்குவிக்க வேண்டும் என்றும், பள்ளிகளில் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க அது உதவிகரமாக இருக்கும் என்றும் நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.