Tamil Entrepreneurs

Viral Video | வேலையில் மூழ்கிப் போன மகளை திசை திருப்ப நடனமாடிய தந்தை… வைரல் வீடியோ!


பிள்ளைகள் என்ன தான் வளர்த்தாலும் அப்பாவுக்கு என்றுமே சின்ன குழந்தைகள் தான். அதேபோல் பெற்றோருக்கு வயதானாலும் தனது பிள்ளைகளிடம் சில சமயங்களில் செல்ல சேட்டை செய்வது உண்டு. அப்படிப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தியுள்ளன. வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதால் 12 மணி நேரத்தைக் கடந்தும் வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் குடும்ப உறுப்பினர்கள் அல்லது செல்லப்பிராணிகளின் அன்புத்தொல்லைக்கு இடையில் வேலை பார்ப்பது என்பதே கடினமானது. ஏனெனில் நம்மை சுற்றி இருக்கும் குடும்பத்தினருடன் பேசக்கூட நேரம் கிடைக்காமல், கம்யூட்டர் ஸ்கீரினையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

கவனச்சிதறலுக்கு இடம் கொடுக்காமல் வேலை செய்து கொண்டிருக்கும் போது, நமது குடும்பத்தினர் சில சமயங்களில் வேடிக்கையான விஷயங்களில் ஈடுபடுவது உண்டு. அதுவும் குறிப்பாக நாம் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் வீடியோ கால் மீட்டிங்கில் இருக்கும் போது, குடும்பத்தினர் விளையாட்டாக செய்த பல விஷயங்கள் இணையத்தில் வைரலானது. தற்போது வேலையில் மூழ்கிப் போய் இருந்த தனது மகளின் கவனத்தை திசை திருப்புவதற்காக தந்தை ஒருவர் குழந்தையாக மாறி சேட்டை செய்த வீடியோ சோசியல் மீடியாக்களில் லைக்குகளை குவித்து வருகிறது.

ALSO READ | ட்விட்டரில் சைலன்ட் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘ட்விட்டர் சர்க்கிள்’அம்சம் – என்ன பயன்?

 

சாஹிபா சிங் துபர் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏப்ரல் 15ம் தேதி வெளியிட்டுள்ள வீடியோ இதுவரை 6.46 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் அவர், “தனது வீட்டில் கம்யூட்டர் முன் அமர்ந்து அலுவலகத்தின் ஆன்லைன் பயிற்சி வகுப்பை கவனித்துக் கொண்டிருக்கிறார். முதலில் அதனை கண்டும் காணாதது போல் கடந்து செல்லும் அவரது தந்தை, மீண்டும் திரும்பி வந்து மகளின் கவனத்தை திசை திருப்பும் விதமாக நடனமாடுகிறார்.

 

 

 

மற்றொரு புறம் அந்த பெண்மணியின் கணவர் சோபாவில் அமர்ந்து அமைதியாக புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார்”. இந்த வீடியோவில் “எனது வாழ்க்கையின் இரண்டு மனிதர்களும் இருவேறு துருவம் போன்றவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து சாஹிபா தனது இன்ஸ்டாகிராமில் “வார இறுதியில் என் பெற்றோரைச் சந்திக்கச் சென்றபோது எனக்கு 3 மணி நேரப் பயிற்சி இருந்தது. என் அப்பா என்னைத் திசை திருப்ப வித்தியாசமான நடனம் ஆடிக்கொண்டே என் முன்னால் வந்தார்.

ALSO READ |  ட்விட்டரில் சைலன்ட் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘ட்விட்டர் சர்க்கிள்’அம்சம் – என்ன பயன்?

 

தலைசிறந்த நிறுவனங்களில் 38 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இயக்குநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு தொழில்முறையைப் பற்றி யாரும் கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் நான் எனது வேலைக்கே ஆபத்தாகிவிடும் என அவரிடம் சொன்ன போது, ‘எல்லா சூழ்நிலையையும் சமாளிக்க உனக்கு நான் கற்று தருகிறேன் என்கிறார்” எனத் தெரிவித்துள்ளார். அப்பா – மகள் பாசத்தை பறைசாற்றும் இந்த க்யூட் வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

Leave a Reply

Your email address will not be published.