Health

Viruman Karthi Clarifies Reason Behind IT Raids In Producers House | இதுக்காக தான் ஐடி ரெய்டு நடத்துறாங்க நடிகர் கார்த்தி விளக்கம்

எம்.முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள தமிழ் திரைப்படம் ‘விருமன்‘.  இப்படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.  தெளிவாக தமிழ் பேசும் கதாநாயகி தமிழ் சினிமாவிற்கு கிடைத்துவிட்டார் என்று பலரும் இவருக்கு புகழாரம் சூட்டிவருகின்றனர்.  சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, கருணாஸ், வடிவுக்கரசி, சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி, ஆர்.கே.சுரேஷ் போன்ற பலர் நடித்துள்ளனர்.  இந்த படத்தை முதலில் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிட  படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது படத்தை ஆகஸ்ட்-12ம் தேதி படக்குழு வெளியிடுகிறது.

ஏனெனில் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாக இருந்த விக்ரம் நடித்த கோப்ரா படம் வெளியாகாததால் விருமன் படம் முன்னதாகவே வெளியாகிறது.  மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திகில் படமான ‘பிசாசு-2’ படமும், விருமன் படமும் ஒரே நாளில் வெளியாக இருந்தது.  கடந்த வாரத்தில் விருமன் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீடு மதுரையில் பல பிரபலங்களுடன் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  இதில் அதிதி, யுவன் ஷங்கருடன் மேடையில் சேர்ந்து பாடியும், அவரை நடனமாட செய்ததும் இணையத்தில் பலராலும் ரசிக்கப்பட்டு வைரலானது.  இதில் சூர்யா ரோலக்ஸ் மற்றும் டில்லி கதாபாத்திரம் குறித்தும் பேசியிருந்தார்.  இந்நிலையில் அந்த விழாவில் நடிகர் கார்த்தி சமீபத்தில் கோலிவுட் வட்டார தயாரிப்பாளர்கள் வீடுகளில் நடந்த ஐடி ரெய்டு குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

Viruman

மேலும் படிக்க | மீண்டும் தாத்தாவான ரஜினிகாந்த்! சூப்பர் ஸ்டார் வீட்டில் புதிய வாரிசு!

தமிழகத்தில் உள்ள தயாரிப்பாளர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது, இதில் ‘விருமன்’ படத்தின் விநியோகஸ்தர் வீட்டிலும் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இதுகுறித்து பேசிய நடிகர் கார்த்தி ஐடி ரெய்டு என்பது பொதுவான ஒன்று, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இதுபோன்ற ஐடி ரெய்டு நடத்தப்படும்.  இது வழக்கமான ஒன்றுதான், இந்த ரெய்டுக்கு பின்னால் எவ்வித அரசியல் பின்புலமும் இல்லை என்று கார்த்தி கூறியுள்ளார்.

மேலும் படிக்க | ‘தளபதி-67’ படத்தில் இத்தனை வில்லன்களா? அடுக்கடுக்கடுக்காக வெளியான அப்டேட்டுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published.