நம் ஊரில் பைக் ஸ்டண்ட் செய்கிறேன் என்ற பெயரில், சாலையில் வரும் அனைவரையும் அலறவிடும் ‘புள்ளிங்கோ’ ஸ்டைல் போல, ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்திலும் சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. உதம்பூர் எனும் இடத்தில், முழுமையாக நிரம்பிய பயணிகளுடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில், ஆச்சரியமும், அதிர்ச்சியும் தரும் விஷயம் என்ன என்றால், பஸ்சை இயக்க வேண்டிய டிரைவர் ஒரு ஓரமாக அமர்ந்து வழிகாட்டிக் கொண்டிருக்க, 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தான் பஸ்சை ஓட்டிக் கொண்டிருக்கிறார். இந்த மாணவி பஞ்சாய்ரி எனும் இடத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
மலைப் பகுதியில் ஆபத்தான பயணம்
18 வயது நிரம்பாமல், முறையான ஓட்டுநர் உரிமம் பெறாமல் வாகனம் ஓட்ட முயற்சிப்பதே தவறு. அதிலும், முழுக்க, முழுக்க பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் இதர பயணிகள் நிரம்பிய பஸ்சை இந்த மாணவி ஓட்டிச் செல்கிறார். இதில், இன்னும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இந்த பஸ் சென்று கொண்டிருந்த வழித்தடம் மலைப்பாதையை கொண்டதாகும்.
தனது சாகச முயற்சிக்கு இடையே, அந்த மாணவி சின்ன தவறை செய்திருந்தாலும் கூட, பல மீட்டர் கொண்ட பள்ளத்தாக்கில் பேருந்து உருண்டு சென்றிருக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், பல உயிர்களையும் பலி வாங்கியிருக்கக் கூடும்.
#ViralVideo of negligent #driving: Careless driver lets a girl student drive a #bus full of passengers in J&K’s #Udhampur. The license & permit of the driver has now been suspended for endangering lives of passengers. pic.twitter.com/AtdeBWQw4C
— India.com (@indiacom) April 18, 2022
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
மாணவி பேருந்து ஓட்டிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதைத் தொடர்ந்து, உதம்பூர் மாவட்ட நிர்வாகம் பஸ் டிரைவருக்கு எதிராக உடனடி நடவடிக்கையை மேற்கொண்டது. அவரது டிரைவிங் லைசென்ஸ் மற்றும் பர்மிட் ஆகியவை உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
Also Read : பிரிய மனமில்லை.. வேறு வழியில்லை.. நெட்டிசன்களை நெகிழ வைக்கும் ஏர்ஹோஸ்டஸ்ஸின் வைரல் வீடியோ
இதுகுறித்து உதம்பூர் மாவட்ட போக்குவரத்து அதிகாரி ஜுகல் கிஷோர் கூறுகையில், “தொடர்புடைய வீடியோவை நாங்கள் ஆய்வு செய்தோம். ஜேகே14ஜி – 2734 என்ற பதிவு எண் கொண்ட அந்த பஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாணவிக்கு அருகில் அமர்ந்து கொண்டு பேருந்தை எப்படி ஓட்ட வேண்டும் என அவர் கற்பித்துக் கொண்டிருக்கிறார். பலரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயலை மேற்கொண்ட அந்த டிரைவரின் உரிமம் மற்றும் பர்மிட் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தார்.
Also Read : பெண் கர்ப்பம்… ஏலியன் காரணமா? பெண்டகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
இதற்கிடையே, முறையான பர்மிட் இன்றி இயக்கப்பட்ட மற்றொரு பஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் ஆகியோர் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.