Tamil Entrepreneurs

Watch Little girl surprises dad at work flaunts dress she wore for school function Viral Video


உலகில் உள்ள அனைத்து விதமான உறவுகளையும் விட அப்பா – மகள் உறவு கொஞ்சம் ஸ்பெஷலானது. மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும், பெண் பிள்ளைகளின் அன்பில் திளைத்து போகக்கூடிய சுகம். பெண் குழந்தைகளை பொறுத்தவரை அப்பாக்கள் தங்களுடைய ஆண் தேவதைகள் என்றால், அப்பாக்களுக்கு மகளோ உயிருடன் நடமாடும் தேவதைகள்.

ஒரு தந்தையைப் பொறுத்தவரை தான் பெற்ற மகன், மகள் இருவரது வளர்ச்சியிலும் ஒரே மாதிரி அக்கறை காட்டினாலும், எப்போதும் பெண்பிள்ளைகள் மீது மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேர் எடுத்துக்கொள்வார்கள். அதற்கு காரணம் பெண் பிள்ளைகளை பொத்தி வளர்க்க வேண்டும் என்றல்ல, ஆண் தனது இன்னொரு தாயாக மகளை நேசிப்பதால் தான். ஆம், உலகம் முழுவதுமே பெரும்பாலான ஆண்கள் தங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தையை தனது தாயின் மறுவடிவமாக பார்க்கின்றனர்.

பெண் பிள்ளைகளுக்கும் அம்மாவை விட அப்பா மீது தான் பாசம் அதிகம் காணப்படுகிறது. காலையில் எழுப்பி, காபி கொடுத்து, குளிக்க வைத்து, சாப்பாடு ஊட்டி, யூனிபார்ம் போட்டு தயார் செய்வது அம்மாவாக இருந்தாலும், அப்பா வந்து தான் பள்ளியில் விட வேண்டும் என்பதே மகள்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதேபோல் தான் எடுத்த முதல் மதிப்பெண், பேச்சுப்போட்டியில் வாங்கிய கோப்பை, பள்ளி ஆண்டு விழாவிற்கு போட்ட மாறுவேடம் என எதுவாக இருந்தாலும் பெண் பிள்ளைகள் முதலில் காண்பித்து சந்தோஷப்படுவது அப்பாவுடன் தான். அப்படிப்பட்ட அப்பா – மகள் பாசத்தை பறைசாற்றும் வகையிலான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெற்ற பிள்ளையை அழகாக உடையணிந்திருப்பதைக் கண்டு மகிழ வேண்டும் என எந்த அப்பாவுக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால் வேலைக் காரணமாக பள்ளி விழாக்களில் அப்பாக்களை விட அம்மாக்கள் தான் குழந்தையுடன் பங்கேற்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் நாம் பார்க்கப்போகும் வீடியோவில் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்காக நேர்த்தியாக உடையணிந்துள்ள குட்டி தேவதை ஒருவர், தான் அப்பா வேலை செய்யும் இடத்திற்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

Also Read : காதலை சொன்னதும் காய்ச்சலே வந்ததாம்.. மருத்துவருக்கும் ஊழியருக்குமான நெகிழ வைக்கும் காதல் கதை..!

அந்த வீடியோவில் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்காக அழகான வெள்ளை மற்றும் நீல நிற ஆடை அணிந்த ஒரு சிறுமி, தனது உடையை தந்தையிடம் காண்பிக்க வேண்டும் என்ற ஆசையுடன் அவரது பணியிடத்திற்கு வெளியே காத்துக்கொண்டிருக்கிறார். கேரேஜ் போல தோற்றமளிக்கும் இடத்தில் இருந்து வெளியே வரும் தந்தை தனது மகள் நேர்த்தியான ஆடையுடன் க்யூட்டாக நின்றுகொண்டிருப்பதை பார்த்து புன்னகைக்கிறார். தனது மகளை அள்ளிக்கொஞ்ச வரும் அவர், மீண்டும் கேரேஜுக்குள் சென்று தனது அழுக்கு படித்த ஓவர் கோட்டை கழட்டி வைத்துவிட்டு, மகளின் கன்னத்தில் பாசமாக முத்தமிடுகிறார். அப்பாவை பார்த்து குஷியான சிறுமியோ, தனது கைகளால் உடையை தூக்கிப்பிடித்தபடி, “இந்த டிரஸ் எனக்கு நல்லா இருக்கா?” என கேட்பது போல் நடனமாடுகிறாள்.

Also Read : திருட முற்பட்டபோது உடனடி கர்மவினைப் பயனை அனுபவித்த பெண் – வீடியோ வைரல்!

குட்நியூஸ் மூமெண்ட் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “அப்பா வேலை செய்யும் இடத்திற்குச் சென்று மகள் அவரை ஆச்சரியப்படுத்துகிறாள், அவள் பள்ளி விழாவிற்கு எவ்வளவு அழகாக உடை அணிந்திருந்தாள் என்பதைக் காட்டுகிறாள்” என்ற கேப்ஷனுடன் பகிரப்பட்டுள்ளது. சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த நெகிழ்ச்சியான வீடியோ ஏராளமானோரின் இதயத்தை கொள்ளையடித்துள்ளது. அதனால் தான் வெறும் மூன்றே நாட்களில் இந்த வீடியோ ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

Leave a Reply

Your email address will not be published.