மரணம் பற்றி ரகசியத்தை உடைப்பதற்காக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள் சில கோட்பாடுகளையும் உருவாக்கியுள்ளனர். இதில் மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, மீண்டும் உயிருடன் வந்த நபர்கள் கொடுத்த பதில்கள் முக்கியமானதாக உள்ளன.
சமீபத்தில் ரெடிட் தளத்தில் மரணத்தை நெருங்கிய நபர்கள் தங்களது வெவ்வேறு விதமான அனுபவங்களை பதிவிட்டுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. “மருத்துவ ரீதியாக இறந்து, பின்னர் உயிர்ப்பிக்கப்பட்ட/புத்துயிர் பெற்றவர்களே: இறப்பது எப்படி இருந்தது? கடந்து செல்லும் போது நீங்கள் ஏதாவது பார்த்தீர்களா?” என கேட்கப்பட்டுள்ளது. இதற்கு நூற்றுக்கணக்கான நபர்கள் தங்களது பதில்களை பதிவிட்டுள்ளனர்.
Also Read : உலகின் கடைசி செல்ஃபி எப்படி இருக்கும்.? வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்
தான் ஆஞ்சியோகிராம் அறுவை சிகிச்சை செய்து கொண்ட போது, மருத்துவரிடம் பேசி கொண்டிருந்தததாகவும், அப்போது எனது நாடித்துடிப்பு குறைத்து மெல்ல, மெல்ல சுயநினைவை இழக்க ஆரம்பித்ததாக தெரிவித்துள்ள ரெடிட் பயனர் ஒருவர், “உலகம் மென்மையாகவும், பனிமூட்டமாகவும் இருந்தது மற்றும் அனைத்தும் கருப்பு நிறமாக மாறத் தொடங்கியது” என தெரிவித்துள்ளார். ஆனால் மருத்துவர்களின் உடனடி முயற்சியால் அவர் இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்துள்ளது. மீண்டு வந்த நபர் மருத்துவர்களை பார்த்து அந்த உணர்வு மிகவும் அமைதியாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
கோமாநிலைக்கு சென்ற ஒருவர் தனது அனுபவம் குறித்து பகிர்கையில், எனது நினைவில் நான் கோமாவிற்கு செல்வதற்கு காரணமான மற்றும் அதற்கு முந்தைய ஒரு மணி நேர நினைவு மட்டுமே இருந்தது. பழைய நினைவுகள் திரும்ப 2 நாட்கள் ஆனது” என பதிவிட்டுள்ளார்.
மருத்துவ ரீதியாக மரணமடைந்து, மீண்டும் உயிர் பெற்ற நபர் கூறுகையில், தூய்மையான, சரியான, தடையற்ற தூக்கம், கனவுகள் இல்லை. நான் திரும்ப அழைத்து வரப்பட்டபோது கோபமடைந்தேன். நான் மீண்டும் உயிர் பெற்று கண் விழித்த போது ‘அடச்சே மீண்டும் இங்கேயா!’ என்பது போல் எனது உணர்வு இருந்தது” என பதிவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.