Tamil Entrepreneurs

Woman Makes Over Rs 67K a Month Chewing Gum / மாதம் ரூ.480-க்கு சூயிங்கம்களை வாங்கி ரூ.67,000-க்கும் மேல் சம்பாதிக்கும் இளம்பெண்


இயல்பான திறமை உள்ள பலர் தங்களுக்கு தெரிந்த வழிகளில் நன்றாக சம்பாதித்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் மட்டுமே தங்களது வினோத திறமை காரணமாக பணம் ஈட்டும் வழியை கண்டறிகின்றனர்.

சிறு வயதில் நாம் அதிகமாக சூயிங் கம் அதாவது பபுள் கம்மை மென்று சுவைத்து இருப்போம், சில நிமிடங்களில் அதன் சுவை மறைந்தாலும் கூட அதை விடாமல் நாம் வாயில் வைத்து மெல்ல காரணம் அதை வாயில் வைத்து பெரிய பபுள் அதாவது குமிழை உருவாக்கி அதை வெடிக்க வைத்து விளையாடவே. நம்மில் பலரும் சூயிங் கம்மில் பபுள் விட்டு விளையாடுவதை நண்பர்களுடன் போட்டியாகவே கருதி விளையாடி இருப்போம். இதெல்லாம் ஒரு சாதனையா அல்லது திறமையா என்று நீங்கள் கேட்கலாம்.!

ஆனால் இங்கே ஒரு ஜெர்மனி இளம்பெண்ணுக்கு இந்த வினோத பழக்கம் மாதம் சுமார் 700 பவுண்டுகளுக்கு மேல் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.67,000) சம்பாதிக்க உதவுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இது உண்மை தான்!.

30 வயதான ஜூலியா ஃபோராட் என்ற அந்த இளம்பெண் சூயிங் கம்மை கொண்டு என்ற ராட்சத பபுள்களை ஊதும் அரிய திறமை கொண்டவராக இருக்கிறார். இது அவரை சோஷியல் மீடியாக்களில் மிகவும் பிரபலமாக்கியது. இவர் தனது இந்த அசாத்திய திறமையை எப்படி பணமாக்குகிறார் தெரியுமா? ஒரே நேரத்தில் சுமார் 30 சூயிங் கம் பீஸ்கள் வரை வாயில் போட்டு மெல்லும் ஜூலியா ஃபோராட், அவரது தலையை விட இரண்டு மடங்கு அளவு மிக பெரிய பபுள்களை ஊதுகிறார். இந்த பபுள்களை ஊதும் போது கிளிக் செய்து எடுக்கப்படும் போட்டோக்களை வெளிநபர்களுக்கு விற்று அதன் மூலம் சராசரியாக மாதம் சுமார் ரூ.67,000-க்கும் மேல் சம்பாதிக்கிறார் 30 வயதான Julia Forat.

சோஷியல் மீடியாக்கள் மூலம் இவர் தொடக்கி இருக்கும் இந்த வினோத பிசினஸிற்காக மாதம் ஒன்றுக்கு இவர் செய்யும் முதலீடு எவ்வளவு தெரியுமா.? வெறும் £5 அதாவது ரூ.480 மட்டுமே. ஆம் ஒரு மாதத்திற்கு சுமார் 500 ரூபாய்க்குள் மட்டுமே செலவு செய்து கிட்டத்தட்ட ரூ.67,000-க்கும் மேல் சம்பாதிக்கிறார் இந்த இளம்பெண்.

Also Read : உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அரிதான பிங்க் நிற வைரம்; விலை எவ்வளவு தெரியுமா?

எப்படி இந்த ஐடியா வந்தது.? நான் பெரிய சைஸ் பபுள் ஊதும் போட்டோக்கள் சோஷியல் மீடியாக்களில் நெட்டிசன்களிடையே கவனம் பெற துவங்கியது. இதை பார்த்த என் நண்பர் ஒருவர் “உங்கள் சூயிங்கின் கிளிப்களை விற்கலாம்” என்று ஒரு நாள் நகைச்சுவையாக என்னிடம் கூறினார் என குறிப்பிட்டுள்ளார் ஜூலியா. முதலில் இது கொஞ்சம் வேடிக்கையாக தோன்றியது. எனினும் சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன், இது பணம் சம்பாதிக்க உதவும் ஒரு தனி ட்ரெண்ட் என்பதை அறிந்து கொண்ட பிறகு செயலில் இறங்கினேன் என்று கூறி இருக்கிறார்.

முதலில் நான் My.Club மற்றும் ஆன்லைனிலும் கிளிக்ஸ்களை ஷேர் செய்ய துவங்கினேன். அங்கு நான் யூஸர்களின் கவனத்தைப் பெற்றேன். எனது ரசிகர்கள் அவர்கள் விரும்பும் கன்டென்டை அவர்களுக்கு நான் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்கள் எனது திறமையை பார்த்து மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட வீடியோ அல்லது போட்டோவை கேட்கிறார்கள். அதே போல நான் வெவ்வேறு ஆடைகளை அணியும் போது வெவ்வேறு கோணங்களில் இருந்து பெரிய, சிறிய, சிறிய அல்லது பல பபுள்ஸ்களை ஊத வேண்டும் என்று அவர்கள் விரும்பினால் அதை என்னிடம் கேட்கவும் நான் அனுமதிக்கிறேன் என்றார்.

மேலும் கூறிய ஜூலியா எனக்கு நானே சவால் விடுவது மற்றும் கன்டென்டை உருவாக்குவது வேடிக்கையான ஒன்றாக இருக்கிறது. எனது ரசிகர்கள் என்னை மிகவும் ஆதரிக்கிறார்கள் என்கிறார். ஜூலியா தனது விசித்திரமான திறமையால் பணத்தை குவித்தாலும், மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்த்து வருகிறார். தனது திறமை மூலம் கிடைக்கும் பணத்தை அடிக்கடி ட்ரீட்டிற்காக செலவழிப்பதாகவும் கூறி இருக்கிறார். சூயிங் கம் மற்றும் பபுள் ப்ளோயிங் என்பது ஃபெடிஷின் ஒரு வடிவமாகும், இது ஆன்லைனில் தனக்கு அதிக பார்வையாளர்களை வழங்குவதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.Source link

Leave a Reply

Your email address will not be published.