Health

Yogi Babu Son Veshagan Pictures First Time Revealed By actress sanjana singh | முதன் முதலாக வெளியான யோகி பாபு மகனின் புகைப்படம்

தமிழ் திரைத்துறையில் தற்போது சிறந்த காமெடி நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்து வருபவர் காமெடி நடிகர் யோகி பாபு, இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  தற்போது வெளியாகும் பெரும்பாலான படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் இவர் தான் நடித்து வருகிறார், பெரிய ஹீரோக்களின் படங்களில் அதிகளவில் யோகி பாபுவே நடிக்கிறார்.  ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துவிட்டார், இவர் நடிப்பில் வெளியான மண்டேலா படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  பெரிய ஹீரோக்களுக்கு இணையாக பிசியாக நடித்துவரும் இவர் கடந்த 22ம் தேதியன்று தனது 37வது பிறந்தநாளை அவரது மனைவி மஞ்சு பார்கவி குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சில திரைபிரபலங்களுடன் கோலாகலமாக கொண்டாடினார்.

yogibabnu

மேலும் படிக்க | கேஜிஎப் 2 செய்த மற்றொரு சாதனை! கெத்து காட்டும் யாஷ்

யோகி பாபுவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் நடிகை சஞ்சனா சிங் கலந்துகொண்டார், இவர் ரேணிகுண்டா, கோ, அஞ்சான் மற்றும் தனி ஒருவன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.  இவர் அவரது சமூக வலைதள பக்கத்தில் யோகி பாபுவின் ஒன்றரை வயது மகனான பி.எம்.விஷாகானின் அழகான புகைப்படத்தை முதன்முதலாக ரசிகர்களின் பார்வைக்கு பகிர்ந்துள்ளார்.  புகைப்படத்துடன் சில கேப்ஷன்களையும் பதிவிட்டுள்ளார், அதில் இந்த சிறப்பான தினத்தில் என்னை பங்கேற்றுக்கொள்ள அழைத்ததற்கு மிக்க நன்றி சார், நீங்கள் மேலும் சிறப்படைய எனது வாழ்த்துக்கள்.  இன்று மட்டுமில்லை நாளை, எப்பொழுதும் உங்களுக்கு பல ஆசீர்வாதங்களும், அளவற்ற மகிழ்ச்சியும் கிடைக்கட்டும்.  இந்த பிறந்தநாள் உங்களுக்கு அற்புதமான பிறந்தநாளான அமையட்டும், இதேபோல இனிவரும் பிறந்தநாட்களும் இதேபோல அமையட்டும். என்று உணர்வுபூர்வமாக யோகிபாபுவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

மேலும் யோகி பாபுவின் மகனை தூக்கிவைத்துக்கொண்டு சில க்யூட்டான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.  தற்போது சஞ்சனா சிங் ஜீவா மற்றும் மிர்ச்சி சிவாவுடன் கோல்மால் என்கிற படத்தில் நடித்து வருகிறார், அதனைத்தொடர்ந்து தெலுங்கில் ரவி தேஜாவுடன் ராமா ராவ் ஆன் டூட்டி என்கிற படத்தில் நடிக்கிறார்.  மேலும் யோகி பாபு பொம்மை நாயகி, நானே வருவேன், வாரிசு, அயலான், சலூன், காசேதான் கடவுளடா மற்றும் பூமர் அங்கிள் போன்ற படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.

மேலும் படிக்க | கோப்ராவை முந்தும் விருமன்! கார்த்தி டீமின் அதிரடி முடிவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link

Leave a Reply

Your email address will not be published.